ads

தளபதி 62 படத்திற்காக ஒரு பாடலை பாடவுள்ள தளபதி

ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் ஒரு பாடலை தளபதி விஜய் பாடவுள்ளார்.

ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் ஒரு பாடலை தளபதி விஜய் பாடவுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது 'தளபதி 62' படம் இயக்குனர் ஏஆர் ரஹ்மான் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர் சங்க போராட்டம் நடக்கும் போதும் இந்த படத்திற்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது. இந்த படத்திற்கு 'மெர்சல்' படத்தை தொடர்ந்து இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

தற்போது இந்த படத்தின் ஒரு பாடலை ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் பாடவுள்ளார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் நடனம், ஸ்டைல் மற்றும் பாடலிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் விஜய், இறுதியாக பைரவா படத்தின் 'பாப்பா பாப்பா' என்ற பாடலை விஜய் பாடியிருந்தார். இவர் குரலில் வெளிவந்த முதல் பாடல் 'பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி'.

இதனை தொடர்ந்து இவர் தற்போது வரை 30க்கும் மேற்பட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். தளபதி ரசிகர்களிடையே விஜய் குரலில் வெளிவந்த பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. விஜய், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த துப்பாக்கி, கத்தி போன்ற படங்களிலும் தனது குரலை பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியில் விஜய் பாடுவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

தளபதி 62 படத்திற்காக ஒரு பாடலை பாடவுள்ள தளபதி