தல சாதனையை முறியடித்த தளபதியின் புது ட்ரெண்ட்

       பதிவு : Feb 14, 2018 15:25 IST    
thalapathy vijay theri new record thalapathy vijay theri new record

தமிழ் திரையுலகில் ரஜினி, கமல் ரசிகர்களுக்கு அடுத்ததாக தற்பொழுது விஜய், அஜித் ரசிகர்கள் அதிகளவு நிலவி வருகின்றனர். முன்னதாக படம் ரிலீஸின் போது அதிகளவு வசூல், விமர்சம் ரீதியில் நல்ல வரவேற்பு போன்றவற்றின் மூலம் தல, தளபதி ரசிகர்களுக்கு இடையில் போட்டிகள் ஏற்படும். இந்நிலையில் போஸ்டர், டைட்டில், டீசர், ட்ரைலர், இசை போன்றவரை அதிகளவு வலைதளத்தில் ட்ரெண்டாக்குவதின் மூலம் போட்டிகள் நிலவி வருகிறது. மேலும் இந்த ட்ரெண்டை புது புது விதத்தில் வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர். இதனை அடுத்து ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வதிலும் தற்பொழுது போட்டிகள் நிலவி வருகிறது.   

இந்நிலையில் கடந்த நாட்களில் வெளிவந்த தல அஜித்தின் 'வேதாளம்' படம் இந்தியில் டப் செய்து யூ-டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஹிந்தியில் டப் செய்யப்பட்ட இப்படம் சில மணி நேரத்திற்குள் அதிகளவு பார்வையாளர்களை யூ- டியூபில் கடந்தது. இதன் காரணத்தினால் டப்பிங் செய்யப்பட்ட படங்களில் அதிகம் பேர் வலைத்தளத்தில் பார்த்த படம் என்ற சாதனையை பெற்றிருந்தது. மேலும் அஜித் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற 'ஆரம்பம்' படம் கன்னடத்தில் டப் செய்து 'தீரா' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இந்த படம் பல திரையரங்கில் 50வது நாட்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்ததை கொண்டாடும் விதமாக அஜித் ரசிகர்கள் '#AJITHsDheeraBB50Days' என்ற டேகை கிரியேட் செய்து சமூக வலைத்தளத்தில் கடந்த நாட்களில் ட்ரெண்டாகியது குறிப்பிடத்தது. 

 

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த 'தெறி' படமும் இந்தியில் டப் செய்யப்பட்டு கடந்த நாட்களில் வெளியிடப்பட்டது. இந்த படம் தற்பொழுது 'வேதாளம்' படத்தினை காட்டிலும் அதிகமான பார்வையை யூ-டியூபில் கடந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. தல அஜித்தின் 'வேதாளம்' படத்தின் சாதனை முறியடித்து தளபதி விஜய்யின் 'தெறி' படம் முன்னிலையில் இருக்கிறதாம். மேலும் 'தெறி' படம் 50 கோடிக்கு மேற்பட்டவர்கள் பார்வையை கடந்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.


தல சாதனையை முறியடித்த தளபதியின் புது ட்ரெண்ட்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்