ads

ஒரே நேரத்தில் விருந்தளிக்கும் தல தளபதி

thala thalapathy new film release from diwali 2018

thala thalapathy new film release from diwali 2018

இயக்குனர் சிவா மற்றும் நடிகர் அஜித் கூட்டணி நான்காவது முறையாக 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்' படத்திற்கு பிறகு இணைந்துள்ளது. இந்த படத்திற்கு 'விஸ்வாசம்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் இளமை தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இதனை நிரூபிக்கும் விதமாக முன்னதாக இவருடைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த படத்தை 'விவேகம்' படத்தை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு பணிகளையும், ரூபன் எடிட்டிங் பணிகளையும் மேற்கொள்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் படப்பிடிப்பிற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இன்னும் சில நாட்களில் ஷூட்டிங் துவங்கவிருக்கும் இப்படத்தினை தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு பரிசளிக்கவுள்ளனர்.  

இந்நிலையில் தளபதி விஜய் மெர்சல் வெற்றியை தொடர்ந்து தனது 62வது படத்தினை ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாக்கவுள்ளார். இந்த படம் விவசாயத்தை மையமாக கொண்டு உருவாக உள்ளது. மேலும் இப்படத்தில் விஜய் இரண்டு வேடத்தில் நடிக்க உள்ளார். அதில் ஒன்று மாற்று திறனாளி வேடத்தை கையளவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்தின் மூலம் முதல் முறையாக மாறுபட்ட வேடத்தை கையாளவுள்ளார். மெர்சல் வெற்றியை தொடந்து விஜய்யின் 62வது படத்திலும் இசை புயல் ஏஆர். ரகுமான் இணைந்துள்ளார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பிற்காக சிறப்பு பூஜை இன்று நடைபெற்ற கையோடு படப்பிடிப்பும் துவங்கப்பட்டது. இதில் முதல் முறையாக கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்படும் போதும் பூஜை நடைபெறும் போதும் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படத்தினை தீபாவளிக்கு வெளியிடுவதாக ஏஆர். முருகதாஸ் அவரது ட்விட்டரில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.      

தல தளபதி படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்புகள் நிலவும் இந்நிலையில் ஒரே நேரத்தில் வெளிவர உள்ள இவர்களின் படங்களுக்கு இந்நாளிலில் இருந்து வரவேற்புகள் குவிந்து வருகிறது.          

ஒரே நேரத்தில் விருந்தளிக்கும் தல தளபதி