ads

விஜய்யின் 63வது படத்தின் புதிய தகவல்

vijay 63 new film updates

vijay 63 new film updates

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளிவந்த 'மெர்சல்' தமிழ் திரையுலம் முதல் தெலுங்கு திரையுலம் வரை மாபெரும் ஹிட் அடித்தது. இந்த படத்தில் விஜய் பேசிய இலவச மருத்துவம் வசனத்திற்கு பெரும்பாலான அளவிற்கு எதிர்ப்புகள் வந்தும் படத்தின் வரவேற்பு ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியிலும் வெகுவாக வரவேற்கப்பட்டது. இதனை தொடந்து விஜய் தனது 62வது படத்தினை ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இவர்களது கூட்டணி இதற்கு முன்பு துப்பாக்கி, கத்தி படத்தில் இணைந்திருந்ததை தொடர்ந்து  தற்பொழுது இந்த புது படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. 

 இந்த படம் விவசாயம் சார்ந்த படமாகவும், இரு கதாபத்திரங்களில் விஜய் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் இந்த படத்தின் தலைப்பை 'கலப்பை' என்று வைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை படக்குழு மறுத்துள்ளது. விஜய்யின் 62 வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 'பைரவா' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டெஸ்ட் லுக் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.     

இதனை தொடர்ந்து விஜய்யின் 63வது படம் பற்றிய தகவல் வந்துள்ளது. விஜய்யின் 63வது படத்தினை 'தீரன் அதிகாரம் ஒன்று' இயக்குனர் வினோத் இயக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. 'தீரன்' வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத், விஜய்யின் 63வது படத்தினை இயக்கவுள்ளார். இவர்களின் கூட்டணி முதல் முறையாக இந்த புது படத்தின் மூலம் இணையவுள்ளது. விஜய் 'தீரன்' படத்தினை பார்த்து இயக்குனர் வினோத் மற்றும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி இருந்தார். இதனை தொடர்ந்து விஜய் சமீபத்தில் இயக்குனர் வினோத்தை பார்த்ததாகவும், நல்ல கதை இருந்தால் இருவரும் இணைந்து ஒரு படத்தினை எடுக்கலாம் என்று பேசியிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இதன் காரணத்தினால் வினோத், விஜய்க்காக ஒரு புது கதையை எழுதி வருவதாக வெளிவந்த தகவலில் கூறப்படுகின்றது. மேலும் இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பு விரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விஜய்யின் 63வது படத்தின் புதிய தகவல்