ads

பைரவா கூட்டணியில் விஜய்யின் 62வது படம்

thalapathy 62 movie heroine

thalapathy 62 movie heroine

மெர்சல் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் தனது 62வது படத்தினை ஏ ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். துப்பாக்கி, கத்தி படத்தினை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள இக்கூட்டணியில் விஜய் இரண்டு வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்தபடத்தில் விஜய் விவசாயத்திற்கு குரல் கொடுப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விஜயின் 62 வது படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் மலையாள ஒளிப்பதிவாளரான க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் மலையாளத்தில் நீலஹாசம் பச்சக்கடல் சுவன்ன பூமி, மரியம் முக்கு, காளி, சோலோ, ஹே ஜூடு போன்ற வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

மேலும் இந்த படத்தில் எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் மேற்கொள்கிறார். இவர் சிறந்த எடிட்டிங் பணிகளுக்கான விருதை பல படங்களுக்காக பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இசையமைப்பாளராக இசை புயல் ஏஆர்.ரகுமான் இணைந்துள்ளார். முன்னதாக இப்படத்தின் நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளிவந்திருந்தது. தற்பொழுது வந்த தகவலில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக இணைந்துள்ளார் என்ற தகவலை சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. பைரவா படத்தினை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைவது குறிப்பிடத்தக்கது.  

பைரவா கூட்டணியில் விஜய்யின் 62வது படம்