விஜய் 62 புது பட டைட்டில்

       பதிவு : Dec 14, 2017 09:31 IST    
vijay 62 movie title vijay 62 movie title

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. துப்பாக்கி, கத்தி படத்தினை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் விஜயின் 62 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார். விஜயின் 62 வது படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் மலையாள ஒளிப்பதிவாளரான க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் மலையாளத்தில் நீலஹாசம் பச்சக்கடல் சுவன்ன பூமி, மரியம் முக்கு, காளி, சோலோ, ஹே ஜூடு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் மேற்கொள்கிறார். இவர் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் பல படங்களை எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு சிறந்த எடிட்டிங் பணிகளுக்கான விருதை பல படங்களுக்காக பெற்றுள்ளார்.இந்த படத்தின் இசைஅமைப்பாளராக இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படம் விவசாயம் சார்ந்த படம் என்று ஏற்கனவே படக்குழுவினர் தெரிவித்த நிலையில் தற்போது இந்த படத்தின் தலைப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜயின் 62 வது படத்திற்கு 'கலப்பை' என்று பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

 


விஜய் 62 புது பட டைட்டில்


செய்தியாளர் பற்றி

அடிப்படையில் தேவி ஒரு ஓவியர் மற்றும் பயணங்களை மிகவும் ரசிப்பவர். இயற்கையின் மீதும் தனது எழுத்து திறமையின் மீதும் சிறந்த ஆர்வம் கொண்டவர். இவர் இயற்கை வளங்களையும், மலை சார்ந்த இடங்களையும் நிறையவே நேசிக்கிறார். இவர் தான் சேகரித்த பல்வேறு தகவல்களையும், எண்ணங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர். ... மேலும் படிக்க

Yasodha senior editor and writer

யசோதாமூத்த எழுத்தாளர்