ads

விஜய் 62 படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு

vijay 62 movie updates

vijay 62 movie updates

துப்பாக்கி, கத்தி படத்தினை தொடர்ந்து ஏஆர். முருகதாஸ் இயக்கவிருக்கும் விஜய்யின் 62வது படத்தில் விவசாயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை மையமாக கொண்டு உருவாக்க உள்ளது. இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதோடு, இது வரை நடித்திராத மாற்று திறனாளியாகவும் நடிக்க இருக்கிறாராம். மேலும் இந்த படத்தில் அதிகமாக அரசியல் சம்மந்தப்பட்ட வாசனைகளும் இடம் பெற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. 

படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் துவங்கவிருப்பதாகவும், 6 மாதத்தில் படப்பிடிப்பு பணிகளை முடித்து விடுவதாகவும் படக்குழுவினர் தற்பொழுது தெரிவித்துள்ளனர். மேலும் படத்தில் இரு நாயகிகள் இடம் பெறுவதாகவும் நாயகிக்கான தேர்வு நடைபெற்று இருப்பதாகவும் கூறியுள்ளனர். சன் பிக்ச்சர்ஸ் & லைக்கா ப்ரொடெக்சன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஏ ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படத்தினை தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.    

‘அங்கமாலி டைரீஸ், சோலோ’ புகழ் பெற்ற மலையாள திரையுலகின் ஒளிப்பதிவாளரான  கிரீஸ் கங்காதரன் விஜய்யின் 62வது படத்தில் ஒளிப்பதிவாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். மேலும் இது வரை 8 தேசிய விருதுகளை வாங்கிய ஸ்ரீகர் பிரசாத் இந்த படத்தில் எடிட்டிங் பணியில் இணைத்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. படக்குழுவினர் எவ்வித தகவலையும் வெளிப்படுத்தாத நிலையில் விரைவில் படத்தின் சம்பந்தப்பட்ட தகவலை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

விஜய் 62 படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு