ads
விஜய் 62 படத்தில் புது வித தோற்றம் என்னவென்று தெரியுமா!
மீனா ஸ்ரீ (Author) Published Date : Nov 07, 2017 17:15 ISTபொழுதுபோக்கு
தமிழ் திரையுலகில் விக்ரம், அஜித், சூரியா பாணியில் அடுத்து விஜய் தன் நடிப்பு திறமையை ஆர் முருகதாஸ் இயக்கும் விஜய் 62 படத்தில் வெளிப்படுத்த போகிறார். ஆம், விஜய் இதில் மாற்று திறனாளியாக களம் இறங்கப்போகிறாராம்.
கதைகளுக்கேற்ப தன்னை மாற்றும் திறனை பெற்றவர் விக்ரம். இவர் நடித்த சேது, காசி, பிதாமகன், தெய்வ திருமகள், ஐ போன்ற படங்களில் நடித்து மாற்று திறனாளியாக திறமையை வெளிப்படுத்தி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார். இவருக்கு அடுத்த படியாக தல அஜித் வில்லன் படத்தில் இரண்டு வேடத்தில் நடிப்பதோடு மாற்றுத்திறனாளியாக நடித்து அனைவரின் மனதினை கவர்த்திருந்தார். சூர்யாவும் பேரழகன் படத்தில் உடல் ஊனமுற்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
இந்நிலையில் இவர்களை பின்தொடரும் விதமாக மெர்சல் படத்தினை தொடர்ந்து விஜய், கத்தி மற்றும் துப்பாக்கி படங்களை இயக்கிய ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். இப்படத்தில் விஜய் இரண்டு வித வேடத்தில் நடிப்பதாகவும் அதில் ஒரு வேடத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது. மாற்றுத்திறனாளியாக விஜய் நடிப்பது இதுவே முதல் முறை, மேலும் இந்த புது வித வேடத்தில் நடிப்பது உறுதி என்றால் ரசிகர்களை கவர்வதும் உறுதி.
முருகதாஸ் பெரும்பாலும் சமுதாயத்தின் அடிப்படையில் படத்தினை எடுப்பவர். இந்நிலையில் விஜய்யின் 62 படமும் சமுதாயத்தின் நோக்கத்தில் எடுக்கப்படவுள்ளது. இப்படத்தின் மூலம் முருகதாஸ் இது வரை கண்டிராத மாறுபட்ட வேடத்தில் விஜயை காண்பிக்கவுள்ளார்.