ஆக்சன் கிங் டீசரை வெளியிடும் ஏ ஆர் முருகதாஸ்

       பதிவு : Nov 06, 2017 17:14 IST    
ஆக்சன் கிங் டீசரை வெளியிடும் ஏ ஆர் முருகதாஸ்

'வேதம்' படத்தினை தொடர்ந்து ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இயக்கும் ‘சொல்லி விடவா’ இப்படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் எடுத்து வரும் இப்படத்தில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்க, கன்னட நடிகர் சந்தன் குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.  

விஷால் நடிப்பில் வெளிவந்த பட்டத்து யானை படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான ஐஸ்வர்யா அர்ஜுன் இரண்டாவது முறையாக ஸ்ரீராம் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக அர்ஜினின் மனைவி நிவேத்திதா அர்ஜுன் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். 

 

ஜாசி கிஃப்ட் இசை அமைக்கும் இப்படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு ஏ ஆர் முருகதாஸ்  வெளியிடவுள்ளார். மேலும் இந்த படத்தினை விரைவில் வெளியிடுவதற்கான பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.


ஆக்சன் கிங் டீசரை வெளியிடும் ஏ ஆர் முருகதாஸ்


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்