Policies

About Us விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் Disclaimer Policy Privacy Policy

Contact

Contact Us Twitter Facebook Google +
Copyright Stage3 News
2018. All Rights Reserved

தளபதி 62 படத்தின் முக்கிய தகவல்

இளைய தளபதி விஜய், 1992-ஆம் ஆண்டு வெளியான 'நாளைய தீர்ப்பு' படத்தில் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமானார். அதற்கு முன்பு அவருடைய தந்தையான இயக்குனர் எஸ் ஏ சந்திர சேகர் இயக்கத்தில் வெளிவந்த வெற்றி, நான் சிகப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 'நாளைய தீர்ப்பு' படத்திற்கு பிறகு தனது தந்தை இயக்கத்தில் செந்தூர பாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு, மாண்புமிகு மாணவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது வரை கிட்டத்தட்ட 60 படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். மேலும் இவருடைய படங்களில் 30 பாடல்களுக்கு மேல் தனது சொந்த குரலில் பாடியுள்ளார்.

இவர் தற்போது 'மெர்சல்' படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் விவசாயம் சார்ந்த படமாகவும், இரு கதாபத்திரங்களில் விஜய் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் இந்த படத்தின் தலைப்பை 'கலப்பை' என்று வைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை படக்குழு மறுத்துள்ளது. விஜயின் 62 வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 'பைரவா' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.

இந்த படத்தின் இசையமைப்பாளராக இசைப்புயல் இணைந்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு காமெடி நடிகராக வலம் வரவுள்ளார். இதர தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்காக இசைப்புயல் தனது பணியை தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஒரு பாடலை ஏஆர் ரஹ்மான் முடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டெஸ்ட் லுக் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. தற்போது விடுமுறைக்காக சீனா சென்றுள்ள விஜய் இந்தியா திரும்பியதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது.


தளபதி 62 படத்தின் முக்கிய தகவல்

செய்தியாளர் பற்றி
செய்தியாளர்
விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார்.
1B, Commercial Site, TNHB,
HUDCO Colony, Peelamedu,
Coimbatore, Tamil Nadu
India - 641004.
9585585516 vigneshanjuvi06@gmail.com