ads

கமல் ஹாசன் ராஜேஷ் செல்வா கூட்டணியில் மீண்டும் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் விக்ரம்

இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் கமல் தயாரிப்பில் விக்ரம் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் கமல் தயாரிப்பில் விக்ரம் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடந்த 21ஆம் தேதி வெளியாகி நல்ல வசூலை பெற்று வரும் படம் 'சாமி ஸ்கொயர்'. இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்' படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து விக்ரம், இயக்குனர் ஆர்எஸ் விமல் இயக்கத்தில் 'மகாவீர் கர்ணா' என்ற சரித்திர படத்திலும், இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்க உள்ளார். இதில் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் உருவாகவுள்ள விக்ரமின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.

இந்த படத்தினை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல் ஹாசன் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கமல் மகள் அக்ஷரா ஹாசன் நடித்து வருகிறார். இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா முன்னதாக கமல் ஹாசனின் 'தூங்கா வனம்' படத்தை இயக்கியவர்.

இந்த படம் கடந்த 2011இல் வெளியான 'Sleepless Night' என்ற பிரெஞ்சு படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியானது. இந்த படத்திற்கு பிறகு ராஜேஷ் எம் செல்வா, விக்ரமை வைத்து இயக்கி வரும் இந்த படம் ஹாலிவுட்டில் கடந்த 2016இல் வெளியான 'Dont Breathe' என்ற படத்தின் தமிழ் ரீமேக் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் காசி, தாண்டவம் போன்ற படங்களுக்கு பிறகு மீண்டும் பார்வையற்றவராக விக்ரம் நடிக்க உள்ளார். 

கமல் ஹாசன் ராஜேஷ் செல்வா கூட்டணியில் மீண்டும் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் விக்ரம்