விக்ரம் பிரபுவின் அசுரகுரு படத்தின் படப்பிடிப்பு

       பதிவு : Feb 13, 2018 14:26 IST    
vikram prabhu asurakuru shooting from february 15th vikram prabhu asurakuru shooting from february 15th

விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த 'நெருப்புடா' படத்தின் வெற்றியை தொடந்து தற்பொழுது பக்கா, துப்பாக்கி முனை போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் 'பக்கா' படத்தில் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்டர் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்த படத்தில் இருந்து இதுவரை வெளிவந்த போஸ்டர், ட்ரைலர், பாடல் போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருவதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது. மேலும் 'துப்பாக்கி முனை' படத்தின் படப்பிடிப்புகள் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபு புதுமுக இயக்குனர் ராஜ்தீப் இயக்கத்தில் 'அசுரகுரு' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இவர் இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளார். மேலும் 'அஞ்சனவித்தை' என்று குறும்படத்தினை இயக்கி தமிழக அரசிடம் இருந்து  சிறந்த இயக்குனருக்கான விருதினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தற்பொழுது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகவிருக்கும் அசுரகுரு படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். திகில் கலந்த அதிரடி த்ரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்தில் முனீஸ்காந்த், ஜெகன், யோகி பாபு போன்றவர்கள் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளனர். ‘JSB ஃபிலிம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பிற்கு வருகிற பிப்ரவரி 15ம் தேதி சிறப்பு பூஜை நடைபெற்றதோடு படப்பிடிப்பையும் துவங்குவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கும் இந்த படத்திற்கு ராமலிங்கம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். 

 


விக்ரம் பிரபுவின் அசுரகுரு படத்தின் படப்பிடிப்பு


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்