ads
கிராமத்து பாணியில் மீண்டும் கார்த்தி - ஜோடி யாருனு தெரியுமா
மீனா ஸ்ரீ (Author) Published Date : Nov 06, 2017 14:10 ISTபொழுதுபோக்கு
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இந்தி நடிகை சாயிஷா சைகில் முதல் படத்திலையே அவரது நடிப்பில் ரசிகர்கள் பேசப்படும் அளவிற்கு வெற்றியை பெற்றிருந்தார்.
விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடிப்பதாக இருந்த 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்தில் நடிப்பதாக கமிட்டாகி இருந்த நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் விஜய் சேதுபதி புது வித கேரட்டரில் நடித்து வரும் 'ஜூங்கா' படத்தில் சாயிஷா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து சாயிஷா, பசங்க 2, கதகளி மற்றும் இது நம்ம ஆளு ஆகிய மூன்று படங்களில் வெற்றியை தந்த இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவிருக்கும் படத்தில் கார்த்தி ஜோடியாக இணையவுள்ளார்.
2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் இமான் இசையமைப்பாளராகவும், வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரியவுள்ளார்கள். கிராமத்து பாணியில் வெற்றியை தந்திருந்த 'கொம்பன்' படத்தைத் தொடர்ந்து கார்த்தி மீண்டும் பாண்டிராஜ் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.