ads
போகன் இயக்குனர் லட்சுமன் இயக்கத்தில் நடிக்க உள்ள விஷால்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Aug 01, 2018 15:31 ISTபொழுதுபோக்கு
நடிகர் சங்க தலைவர் மற்றும் தயாரிப்பாளரான விஷால் நடிப்பில் இறுதியாக தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற படம் 'இரும்புத்திரை'. அறிமுக இயக்குனரான பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஆன்லைன் திருட்டுகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக இருந்தது. இந்த படத்தில் விஷால் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் தயாரித்து வெளியிட்டிருந்தார்.
இந்த படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அதிரடியாக உருவாகி வரும் 'சண்டக்கோழி 2' படம் வரும் அக்டொபர் மாதம் 18ஆம் தேதியில் வெளியாகவுள்ளது. இதன் பிறகு விஷால் புது முக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் 'டெம்பர்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து விஷால் அடுத்ததாக 'போகன்' படத்தை இயக்கிய இயக்குனர் லட்சுமனுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளரான இவர் ஜெயம் ரவியின் 'ரோமியோ ஜூலியட்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதன் பிறகு இவருடைய இயக்கத்தில் போகன் படம் வெளியானது. தற்போது அடுத்ததாக தனது மூன்றாவது படத்திற்கு நடிகர் விஷாலுடன் இணைந்துள்ளார். இது குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.