இரும்புத்திரையின் வெற்றியை தொடர்ந்து விஷாலின் அயோக்கியா

       பதிவு : May 17, 2018 17:59 IST    
நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷால், இரும்புத்திரை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அயோக்கியா என்ற படத்தில் நடிக்க உள்ளார். நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷால், இரும்புத்திரை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அயோக்கியா என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

புதுமுக இயக்குனரான பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் கடந்த மே 11இல் வெளியான படம் 'இரும்புத்திரை'. ஆக்சன் கிங் அர்ஜுன் வில்லனாக நடித்துள்ள இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்து தற்போதுவரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். டிஜிட்டல் இந்தியா, ஆதார் போன்றவற்றை வைத்து நடக்கும் கொள்ளைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் படமாக வெளியான இந்த படம் ரசிகர்களின் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது.

மேலும் இந்த படத்தின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை பக்க பலமாக இருந்துள்ளது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு வெற்றி நிகழ்ச்சி ஒன்றை தற்போது நடத்தி வருகிறது. இந்த விழாவில் விஷால், அர்ஜுன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு உரையாடினார். இந்த விழாவில் விஷால் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

தனது அடுத்த படத்தின் தலைப்பு 'அயோக்கியா' என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரும்புத்திரை படத்திற்கு பிறகு விஷால் இயக்குனர் லிங்குசாமியுடன் இணைந்து 'சண்டக்கோழி 2' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பணிகளை முடித்த பிறகு விஷால் தனது அடுத்த படமான 'அயோக்கியா' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.


இரும்புத்திரையின் வெற்றியை தொடர்ந்து விஷாலின் அயோக்கியா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்