ads

கமல்ஹாசனின் இந்தியன் 2வில் இணைந்த கவிஞர் கபிலன் வைரமுத்து

எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியரான கபிலன் வைரமுத்து தற்போது கமல் ஹாசனின் இந்தியன் 2 வில் இணை எழுத்தாளராக இணைந்துள்ளார்.

எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியரான கபிலன் வைரமுத்து தற்போது கமல் ஹாசனின் இந்தியன் 2 வில் இணை எழுத்தாளராக இணைந்துள்ளார்.

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தற்போது விஸ்வரூபம் 2, இந்தியன் 2 போன்ற படங்களில் பிசியாக உள்ளார். தற்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை கமல் ஹாசன் எழுதி, இயக்கி, நடித்தும் வருகிறார்.

தற்போது தீவிர அரசியலில் களமிறங்கிய இவர் சினிமா, அரசியல் என இரு துறைகளிலும் பிஸியாகவே உள்ளார். 'விஸ்வரூபம் 2' படத்தை தொடர்ந்து 'இந்தியன் 2' படத்தில் இயக்குனர் சங்கருடன் இணைய உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. தற்போது நிலவி வரும் தயாரிப்பாளர் போராட்டம் காரணமாக படப்பிடிப்பு துவங்குவதால் தாமதமாகிறது.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கு பின்னர் கமல் ஹாசன் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஜூன் மாதத்தில் பிக் பாஸ் 2 சீசன் துவங்கவுள்ளது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து முடித்த பிறகே 'இந்தியன் 2' படப்பிடிப்பை கமல் ஹாசன் துவங்கவுள்ளார்.

மேலும் இந்த படத்தில் இணை எழுத்தாளராக தற்போது பிரபல கவிஞர், வசன எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலரான கபிலன் வைரமுத்து இணைந்துள்ளார். இவர் முன்னதாக கவண், விவேகம் போன்ற படங்களுக்கு திரைக்கதை அமைத்துள்ளார். மேலும் பொறியாளன், ஜீவா, அனேகன். பேய்கள் ஜாக்கிரதை, கவண், விவேகம் போன்ற படங்களுக்கு பாடல் வரிகளையும் அமைத்துள்ளார். 

கமல்ஹாசனின் இந்தியன் 2வில் இணைந்த கவிஞர் கபிலன் வைரமுத்து