Policies

About Us விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் Disclaimer Policy Privacy Policy

Contact

Contact Us Twitter Facebook Google +
Copyright Stage3 News
2018. All Rights Reserved

அறப்போர் இயக்கம் வெளியிட்ட சென்னை மாநகராட்சியின் ஊழல் ஆதாரம்

இன்றைய சூழ்நிலையில் ஊழல் என்பது சாதாரணமாகிவிட்டது. மக்களும் இந்த ஊழல் செய்பவர்களை கண்டுகொள்ளாமலும் ஊழலை  சகித்து கொண்டும் பழகிவிட்டனர். எங்கு என்ன நடந்தால் நமக்கென்ன நம்முடைய குடும்பத்திற்கும் நமக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்தால் போதும் என்று எண்ணி சமுதாயத்தை மறந்து சுயநலவாதிகளாக மாறிவிட்டனர். இந்த வகையான ஊழல் அரசாங்கத்திடமும் அதிகாரிகளிடமும் சகஜமாகிவிட்டது. இவர்கள் செய்யும் ஊழலால் இந்தியா முழுவதும் தரமற்ற கல்வி, போக்குவரத்து, மருத்துவமனை போன்ற சாதாரண மக்களுக்கு கிடைக்கும் நலன்கள் தரமற்றதாக உள்ளது. நாட்டில் பல்வேறு அமைப்புகள் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்ததும் போராடியும் வருகின்றனர். இந்த வகையான அமைப்புகளில் ஒன்று அறப்போர் இயக்கம். 

இந்த இயக்கம் தமிழகத்திலும் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என்று போராடி வருகிறது. அரசு நிர்வாகிகளின் ஊழல்களையும் அம்பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் அறப்போர் இயக்கத்தின் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் சென்னை மாநகராட்சியில் நடந்த ஒரு ஊழலை பற்றி அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியுள்ளது. இதில் "சென்னை மந்தைவெளியில் உள்ள தேவநாதன் தெருவில் நடக்கக்கூடிய விஷயங்களை அறப்போர் இயக்கம் கடந்த இரண்டு வருடங்களாக கவனித்து வந்துள்ளது. இந்த தெருவிற்கு மே 30, 2016-இல் 37 லட்சம் செலவில் புதியதாக சாலை அமைத்துள்ளது. இதை ஜே.சந்தானம் என்பவரிடம் சாலை அமைக்கக்கூடிய டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த ஆதாரத்தை ஆர்டிஐ மூலம் பெறப்பட்டுள்ளது. இதனை அடுத்த ஒரே மாதத்தில் மெட்ரோ வாட்டர் அமைப்பின்போது சாலையில் பள்ளம் ஏற்பட்டது. செப்டம்பர் மாதம் தேவநாதன் தேர்வின் சீரற்ற சாலையை சீரமைக்கும் பணியை எம்பிகே என்டர்ப்ரைசஸ் நிறுவனத்திற்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து அக்டோபர் மாதம் தோண்டிய சாலை மீது புதிய சாலை அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. மேலும் டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி சாலை இணைப்பு வேலை செய்ததாக 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை முதன் முதலில் சாலை அமைத்த ஜே.சந்தானம் என்பவருக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை வைத்து இந்த 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஊழல் செய்ததாக இந்த ஆவணம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருக்கக்கூடிய ஒரு சாலைக்கே இந்த கதி என்றால் சென்னை முழுக்க எத்தனை ஊழல் நடந்திருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். இதில் வேதனை என்னவென்றால் இவ்வளவு ஊழல் நடந்தும் இந்த சாலை ஒரு வருடம் கூட நிலைத்து நிற்கவில்லை. தரமற்ற சாலை அமைவதற்கு காரணம் ஒப்பந்ததாரர் மட்டுமல்ல அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இவர்களுக்கிடையே இருக்கக்கூடிய கூட்டு சதி." என்று அறப்போர் இயக்கம் வெளியிட்ட அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆதாரத்தை வெளியிட்டதற்காக அறப்போர் இயக்கத்திற்கு நன்றியை கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது கமல் ஹாசன் சமூக வலைத்தளத்தில் முண்டாசு அணிந்த பாரதியார் போன்று ஒரு புகைப்படத்தில் வைரலாக வருகிறார்.


அறப்போர் இயக்கம் வெளியிட்ட சென்னை மாநகராட்சியின் ஊழல் ஆதாரம்

செய்தியாளர் பற்றி
எழுத்தாளர்
விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார்.
1B, Commercial Site, TNHB,
HUDCO Colony, Peelamedu,
Coimbatore, Tamil Nadu
India - 641004.
9944176767 gai3nk@gmail.com