ads
கமல்ஹாசன் ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு 20 லட்சம் நிதியுதவி
ராசு (Author) Published Date : Nov 17, 2017 09:50 ISTWorld News
அமெரிக்காவில் உள்ள உலக புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய உள்ளது. அதற்காக 40 கோடி செலவாகும் தருவாயில் தற்போது உலகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள தமிழின மக்கள் நிதி திரட்டி வருகின்றனர். இதனை அடுத்து தற்போது நடிகர் கமல் ஹாசன் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருகைக்காக 20 லட்சம் வழங்கியுள்ளார். ஏற்கனவே தமிழக அரசு சார்பில் 10 கோடி வழங்கப்பட்டது. தமிழ் திரையுலகில் இருந்து தமிழ் இருகைக்காக முதலில் குரல் கொடுத்தவர் ந.முத்துக்குமார் அவர்கள். இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அனைவரையும் ஊக்குவிக்கும் பணிகளை மேற்கொண்டார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியின் மூலம் வசூலான பணத்திலிருந்து 16 லட்சத்தை வழங்கியுள்ளார். நடிகர் சூர்யா அகரம் பவுண்டேசனுக்கு நிதி திரட்ட அமெரிக்கா சென்றிருந்தார். இதன் மூலம் வசூலான தொகையிலிருந்து 10 லட்சத்தை தந்துள்ளார். மேலும் நடிகர் மற்றும் திரைப்பட சங்க தலைவரான விஷால் தனது பங்களிப்பாக 10 லட்சத்தை வழங்கியுள்ளார். நடிகர் கருணாஸ் 1 லட்சத்தை தனது பங்காக அளித்து அனைத்து தமிழர்களும் இதற்காக முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.