ads
போயஸ் கார்டனில் கிடைத்த கடிதங்களை வைத்து மீண்டும் ரெய்டு நடத்த முடிவு
மீனா ஸ்ரீ (Author) Published Date : Nov 21, 2017 17:42 ISTPolitics News
சசிகலா மற்றும் அவரது உறவினரது வீடுகளில் கடந்த 9-ஆம் தேதி 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் 1500 ரூபாய் கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது, 15 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க வைர நகைகள் சிக்கின, 20 க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்க பட்டன. இதனை அடுத்து கடந்த 17-ஆம் தேதி இரவு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேத நிலையத்தில் வருமான வரித்துறையினர் 4 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் பல ஆவணங்கள், லேப்டாப் மற்றும் ஏராளமான கடிதங்களை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து தற்போது சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வருமான வரித்துறையினர் கூறியதாவது "சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்திய அறைகளில் கிடைத்த லேப்டப் மற்றும் பென்ட்ரைவ்களில் நாங்கள் சற்றும் எதிர்பாராத பல தகவல்கள் சிக்கியுள்ளது. 2000-ம் ஆண்டுக்கு பிறகு வாங்கிய சொத்துக்கள் ஜெயலலிதா மற்றும் சசிகலா பெயரில் வாங்காததும், இந்த சொத்துக்களை இளவரசியின் குடும்பத்தினர் பெயரில் வாங்கியதும், அந்த சொத்துக்கள் தற்போது சசிகலா கட்டுப்பாட்டில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனங்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யாமல் பணப்புழக்கம் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. மேலும் நாங்கள் பறிமுதல் செய்த கடிதம் மற்றும் ஆவணங்களில் சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான பல சொத்துக்களின் ஆவணங்களும் பத்திரங்களும் கிடைத்தது. கடிதங்களை பொறுத்தவரை பணப்பரிவர்த்தனை இல்லாததை தவிர்த்து மற்ற கடிதங்களை அலசினோம். இதில் கிடைத்துள்ள தகவல்கள் அடிப்படையில் போயஸ் கார்டன் மற்றும் பினாமிகள் வீடுகளில் மீண்டும் சோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளனர்.