ads

சினிமாவை போல அரசியலிலும் ரஜினியுடன் வேறுபடுவதாக கமலஹாசன் கருத்து

அரசியலிலும் சினிமாவை போல ரஜினிகாந்துடன் வேறுபடுவதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

அரசியலிலும் சினிமாவை போல ரஜினிகாந்துடன் வேறுபடுவதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல் ஹாசன், தனது புதிய கட்சி தொடங்கியதிலிருந்து அதனை தீவிர படுத்த பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறார். அரசியலில், தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சியின் நடைமுறைகளையும், செயல்பாடுகளையும் பற்றி எதிரெதிர் கருத்துக்களை தெரிவிப்பது எதிர் கட்சி என்பர்.

தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுகவிற்கு எதிராக திமுக, தேமுதிக, பாஜக மற்றும் தற்போது புதியதாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போன்ற எதிர்க்கட்சிகள் உள்ளது. இதனை தொடர்ந்து விரைவில் ரஜினிகாந்தின் புதிய அரசியல் கட்சியும் இந்த பட்டியலில் சேர உள்ளது. சமீபத்தில் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையானது மக்களுக்கு உகந்ததாக இல்லை என்று பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று கமல் ஹாசன் தனது மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார். இது குறித்து சில ஆய்வுகள் மேற்கொண்டதால் தாமதம் ஆனது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த அவர் "அரசியலில் ரஜினிகாந்துக்கும் எனக்கும் இடையே உள்ள வேறுபாடு தவிர்க்க முடியாதது. நான் அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறேன். அணைத்து மதங்களும் ஒன்றே. சினிமா துறையில் நானும் ரஜினிகாந்தும் தனியாக செயல்பட்டது போல் தற்போது அரசியலிலும் ரஜினிகாந்துடன் வேறு படுகிறேன். ரஜினிகாந்த் பல விஷயங்களிலும் கருத்து கூறாமல் இருப்பதால் அவரை கண்டிப்பது ஏற்கத்தக்கது அல்ல." என்று அவர் தெரிவித்துள்ளார்.

சினிமாவை போல அரசியலிலும் ரஜினியுடன் வேறுபடுவதாக கமலஹாசன் கருத்து