ads
காவலர்கள் வீக், சிபிஎஸ்இ வினாத்தாள் லீக் ராகுல் காந்தியின் விமர்சனம்
வேலுசாமி (Author) Published Date : Mar 29, 2018 15:06 ISTPolitics News
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொது தேர்வு கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. இந்த பொதுத்தேர்வில் சுமார் 28 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் சமூக வலைத்தளங்களில் வினாத்தாள்கள் வெளியாவது நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடமும் 10 வகுப்பில் கணிதம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பின் பொருளியல் வினாத்தாளும் வெளியாகியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
இது தொடர்பான செய்திகள் தற்போது தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களிலும் வெளியாகியுள்ளது. இது குறித்து டெல்லி காவல் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ராஜேந்திர நகர் பகுதியை சேர்ந்த ஒருவர் மீது வினாத்தாளை வெளியிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த செய்தி ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டரில் "எத்தனை லீக்குகள்?..SSC பொது தேர்வு லீக்..தேர்தல் தேதி லீக்...சிபிஎஸ்இ லீக்..அனைத்தும் லீக்காகி விட்டது..வாட்ச்மேன் வீக்.." என கிண்டலாக பதிவு செய்துள்ளார். சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் பிரதமர் மோடியை கிண்டலடித்து பேசியுள்ளார்.
कितने लीक?
— Rahul Gandhi (@RahulGandhi) March 29, 2018
डेटा लीक !
आधार लीक !
SSC Exam लीक !
Election Date लीक !
CBSE पेपरà¥à¤¸ लीक !
हर चीज में लीक है
चौकीदार वीक है#BasEkAurSaal