ads

பிரதமர் மோடியின் மனைவி கார் விபத்தில் படுகாயம்

prime minister modi wife injured in car accident

prime minister modi wife injured in car accident

நாட்டின் 16வது பிரதம மந்திரியான நரேந்திர மோடியின் மனைவியான ஜசோதா பென் சென்ற கார் தற்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜசோதாக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. ஆனால் அவருடன் வந்த உறவினர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. நாட்டின் பிரதமரான மோடிக்கும், ஜசோதா பென்னுக்கும் 1968-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. ஆனால் மூன்று வருடங்களுக்கு பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.

தற்போது ஜசோதா பெண் மெக்சனா மாவட்டத்தில் தனது சகோதரரான அசோக் மோடியுடன் வாழ்ந்து வருகிறார். இவர் பாரன் என்ற இடத்தில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு குஜராத்திற்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது ஆனால் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனை அடுத்து அவருக்கு சிட்டிக்காரில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்து வரப்பட்டு அனுமதிக்க பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

prime minister modi wife injured in car accidentprime minister modi wife injured in car accident
prime minister modi wife injured in car accidentprime minister modi wife injured in car accident

பிரதமர் மோடியின் மனைவி கார் விபத்தில் படுகாயம்