ads

காமன்வெல்த்தில் 15 வயது அனிஷ் பன்வாலா தங்கம் வென்று சாதனை

காமன்வெல்த்தில் 15 வயது அனிஷ் பன்வாலா தங்கம் வென்று சாதனை Imagecredit : Twitter @ImAnishBhanwala

காமன்வெல்த்தில் 15 வயது அனிஷ் பன்வாலா தங்கம் வென்று சாதனை Imagecredit : Twitter @ImAnishBhanwala

21 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோலாஸ்ட் நகரில்  ஏப்ரல் 4 ஆம் தேதி முதல்  நடைபெற்று வருகின்றன. ஆரம்பம் முதலே, இந்தியாவின் நட்சத்திர விளையாட்டு வீரர்கள் பளுதூக்குதல், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் உட்பட பல போட்டிகளில் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.  இதில், முக்கியமாக, தமிழக வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் பளுதூக்குதலில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 25 மீட்டர் ராபிட் பயர்  துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது வீரர்  அனிஷ் பன்வாலா தங்கம் வென்றார். இதன் மூலம், கமென்வெல்த்தில்ஸ் தங்கம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையை அனிஷ் பன்வாலா பெற்றுள்ளார்.

ஏற்கனவே, இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப்  ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியிழும் சென்ற ஆண்டு ஜெர்மனியிலும் சாதனை படைத்தது தங்கம் வென்றுள்ளார், அனிஷ் பன்வாலா. 

இதுவரை இந்தியா,17 தங்கம் உட்பட 42 பதக்கங்களுடன் 3 ஆவது இடத்தில் நீடித்து வருகிறது. முத்திலரண்டு இடங்களில், ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் உள்ளன.

காமன்வெல்த்தில் 15 வயது அனிஷ் பன்வாலா தங்கம் வென்று சாதனை