ads

காமென்வெல்த்தில் சுஷில் குமார் மூன்றாவது தங்கம் ராகுல் ஆவாரே முதல் தங்கம்

காமென்வெல்த்தில் சுஷில் குமார் மூன்றாவது தங்கம் ராகுல் ஆவாரே முதல் தங்கம் Imagecredit: Twitter @WrestlerSushil ‏

காமென்வெல்த்தில் சுஷில் குமார் மூன்றாவது தங்கம் ராகுல் ஆவாரே முதல் தங்கம் Imagecredit: Twitter @WrestlerSushil ‏

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோலாஸ்ட்டில் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆரம்பம் முதலே, இந்தியாவின் நட்சத்திர விளையாட்டு வீரர்கள் பளுதூக்குதல், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் என பல போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை குவித்த வண்ணம் இருக்கின்றனர். இதில், தமிழக வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் பளுதூக்குதலில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டிகளில், இந்தியா, ஒரே நாளில் 4 பதக்கங்கள் வென்றுள்ளது. இதில், முக்கியமாக, 74 கிலோ எடைப்பிரிவில் 34 வயதான மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஜோகன்னஸ் போதாவை 80 வினாடிகளில் வீழ்த்தி 10-0 என்ற கணக்கில் மூன்றாவது முறையாக காமென்வெல்த்தில் தங்கம் வென்றுள்ளார். இதற்கு முன்பாக, டில்லியில் 2010ல் மற்றும் கிளாசிகோவில் 2014ல் இவர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 6 நிமிடங்கள் கொண்ட போட்டியில் தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ் சுஷிலை சமாளிக்க முடியாமல் ஆட்டத்தின் 80 ஆவது விநாடியிலேயே சாய்ந்தார்.

இந்த சாதனைகளின் மூலம், தன் ஆற்றல் மீதும் திறமை மீதும்  சுமத்தப்பட்ட பல்வேறு விமர்சனங்களுக்கு சுஷில் குமார் பதிலடி கொடுத்துள்ளார். இந்த வெற்றியை ஹிமாச்சல் பிரதேஷில் விபத்தில் உயிரிழந்த பள்ளிக் குழந்தைகளுக்கு அர்பணிப்பதாக சுஷில் குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்டத்திற்கு முன்பாக, 57 கிலோ எடைப்பிரிவில், மற்றொரு மல்யுத்த வீரரான ராகுல் அவாரே இந்தியாவிற்கு முதல் மல்யுத்த தங்கத்தைப் பெற்றுத்தந்தார். கனடாவின் ஸ்டீவன் டககாசியை எதிர்கொண்ட ராகுல் 15-7 என்ற கணக்கில் ஆட்டத்தை வென்றார். 

இந்த கமென்வெல்த் போட்டியில் இந்தியா 14 தங்கங்களுடன் தொடர்ந்து 3 ஆவது இடத்தில்  நீடிக்கிறது. 

காமென்வெல்த்தில் சுஷில் குமார் மூன்றாவது தங்கம் ராகுல் ஆவாரே முதல் தங்கம்