ads
T20 உலகத்தர வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்
வேலுசாமி (Author) Published Date : Dec 25, 2017 23:28 ISTSports News
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள், 3 T20 தொடர் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் கடைசி மற்றும் 3 வது T20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில், இரண்டாவது போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கடைசி T20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 19.2 ஓவரில் 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த T20 தொடரில் மூன்று போட்டியையும் இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இதனால் இந்தியா T20 தரவரிசையில் 4 வது இடத்திலிருந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான T20 போட்டி தொடர் தொடங்குவதற்கு முன்பாக T20 உலகத்தர வரிசையில் இந்தியா 119 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்துள்ளது. இலங்கையுடனான 3 போட்டி கொண்ட T20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தி உள்ளது. இதன் மூலம் தர வரிசை பட்டியலில் 4-வது இடத்திலிருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போது 121 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் 124 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதல் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் (120) 3-வது இடத்திலும், நியூசிலாந்து (120) 4-வது இடத்திலும், இங்கிலாந்து (119) 5-வது இடத்திலும் உள்ளது.