ads

இந்தியா - இலங்கை முதலாவது T20 போட்டி - இந்தியா அபார வெற்றி

india vs srilanka t20 cricket

india vs srilanka t20 cricket

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, 3 தொடர் கொண்ட T20 போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இந்தியா டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான கோப்பையை வென்றுள்ளது. இதனை தொடர்ந்து மூன்று தொடர் கொண்ட T20 போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான முதலாவது T20 போட்டி நேற்று கட்டாக் நகரில் நடந்தது. இதில் டாசை வென்ற இலங்கை அணி பீலடிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கினர். ஆட்டத்தின் 5வது ஓவரில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். 

இதனை அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அயர் மற்றும் ராகுல் இணைந்து நிதானமாக ஆடினார். ஆட்டத்தின் 13வது ஓவரில் ஸ்ரேயாஸ் அயர் 27 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய தோனி மற்றும் ராகுல் இணைந்து அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கொரை உயர்த்தினர். இதில் ராகுல் அரை சதம் அடித்து 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தின் 15வது ஓவரில் அவுட் ஆனார்.  இறுதியாக களமிறங்கிய பாண்டே 32 ரன்களுடனும், தோனி 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் தோனி அனைத்து பந்துகளும் புள் ஏக்கரில் வீசப்பட்டது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவரால் பூர்த்தி செய்ய முடியவில்லை. 

இருந்தாலும் 19.5 ஓவரில் 174 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி பந்தை தோனி சந்தித்தார். ரசிகர்கள் எதிர்பார்த்த படி அந்த பந்தை சிக்ஸர் விளாசி ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார். இறுதியாக 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. முதலில் தொடக்க ஆட்டக்காரர்களாக நிரோசன் மற்றும் உபுல் தரங்கா ஆகியோர் களமிறங்கினர். நிரோசன் 13 ரன்களுடனும், தரங்கா 23 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய பெரேரா 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து ஒற்றை ரன்களுடன் ஆட்டமிழந்தனர். 

இறுதியாக 16 ஓவர் முடிவில் மொத்தம் 87 ரன்களுடன் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் சஹால் 4 விக்கெட்டுகளும், பாண்டே 3 விக்கெட்டுகளும், குலதீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், உனத்கட் 1 விக்கெட்டும் வீழ்த்தினார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சஹால் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனை அடுத்து இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது T20 போட்டி 22-இல் நடைபெற உள்ளது.

இந்தியா - இலங்கை முதலாவது T20 போட்டி - இந்தியா அபார வெற்றி