இந்தியா - இலங்கை இரண்டாவது ஒருநாள் தொடரின் மூலம் மூன்று இரட்டை சதங்களை விளாசி ரோஹித் சாதனை

       பதிவு : Dec 13, 2017 16:19 IST    
rohit hit 3rd odi double century rohit hit 3rd odi double century

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று மொஹாலியில் நடந்து வருகிறது. இதற்கு முன்னர் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. இதனை அடுத்து இன்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா 208 ரன்கள் விளாசி இரட்டை சதம் படைத்தார். ஏற்கனவே ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த வீரர் பட்டியலில் ரோஹித் சர்மா இரண்டு இடங்களை பிடித்திருந்தார். இதன் மூலம் இவர் ஒரு நாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

 அவருடைய ஒவ்வொரு அதிரடி சிக்சருக்கும் அவருடைய மனைவி ரித்திகா உற்சாகத்துடன் காணப்பட்டார். இரட்டை சதம் அடித்தவுடன் அவருடைய கண்களில் கண்ணீர் கொட்டியது. இதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வெளியிட்டு 'அவருடைய மனைவிக்கு இதைவிட சிறந்த பரிசு வேறெதுவும் இருக்க முடியாது' என்று விமர்சித்து வருகின்றனர் ரசிக மக்கள். ரோஹித் சர்மாவின் இந்த அதிரடி ஆட்டத்திற்கு முன்னணி கிரிக்கெட் வட்டாரங்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். ரோஹித் சர்மாவின் இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் முதல் ஒரு நாள் தொடரில் இந்தியா தோல்விடைந்ததை சமன் செய்துள்ளார்.  இந்த ஆட்டத்தில் முதல் சதத்தை 115 பந்துகளிலும், இரண்டாவது சதத்தை வெறும் 36 பந்துகளிலும் அடித்து சாதனை புரிந்துள்ளார். இந்த போட்டியின் 50 ஓவர் முடிவில் இந்தியா 393/3 என்ற கணக்கில் உள்ளது. இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை 393 இலக்காக கொண்டு விளையாடி வருகிறது. 12 ஓவர் முடிவில் 53/2 என்ற கணக்கில் இலங்கை தற்போது விளையாடி வருகிறது.

264 - Rohit Sharma

 

237 - Martin Guptill

219 - Sehwag

215 - Gayle

 

209 - Rohit Sharma

208 - Rohit Sharma

200 - Sachin

 


இந்தியா - இலங்கை இரண்டாவது ஒருநாள் தொடரின் மூலம் மூன்று இரட்டை சதங்களை விளாசி ரோஹித் சாதனை


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்