ads
இலங்கை உடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா
வேலுசாமி (Author) Published Date : Dec 07, 2017 00:55 ISTSports News
இந்தியா - இலங்கை இடையேயான 3 டெஸ்ட் தொடர் கொண்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் தொடர் டிராவில் முடிவடைந்த நிலையில் இரண்டாவது தொடரை இந்தியா கைப்பற்றியது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனை அடுத்து 3வது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்து வந்தது. இதன் முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 536 ரன் குவித்து டிக்ளேர் செய்தது, இதில் கேப்டன் கோஹ்லி 243 ரன்களும், முரளி விஜய் 155 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர். முதல் இன்னிங்சில் இலங்கை அணி 373 ரன்கள் எடுத்தது. இதில் கேப்டன் சன்டிமால் 164, மேத்யூஸ் 111 ரன்கள் அதிகபட்சமாக எடுத்திருந்தனர்.
இதனை அடுத்து 163 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை இந்திய அணி ஆடியது. இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இலங்கை அணிக்கு 410 ரன்கள் இலக்கு வைக்கப்பட்டது. 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி ஆடியது. இதன் 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்து. இன்றைய 5வது நாள் ஆட்டத்தில் 379 ரன்கள் மற்றும் 7 விக்கெட் கைவசம் இலங்கை அணி ஆடியது. தற்போது 5வது நாள் முடிவில் 299 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் 1-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது. இதில் தொடர் ஆட்ட நாயகன் விருதை கேப்டன் கோஹ்லி தட்டி சென்றார்.