ads

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற வேண்டும் - சேவாக்

t10 is suitable for olymbic

t10 is suitable for olymbic

கிரிக்கெட் விளையாட்டு தற்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் விளையாடப்பட்டு வருகிறது. தற்போது கிரிக்கெட் விளையாட்டு 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து 50 ஓவர் கொண்ட ஒருநாள் போட்டியாகவும், 20 ஓவர் கொண்ட T20 போட்டியாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் T20 போன்று 10 ஓவர் கொண்ட போட்டிகளை நடத்த உள்ளது. இந்த போட்டி வரும் 14-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 'மாரதா அரேபியன்ஸ்' அணி கலந்து கொள்ள இருக்கிறது. இந்த அணியின் கேப்டனாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தலைமை தாங்க இருக்கிறார். இந்த 'மாரதா அரேபியன்ஸ்' அணிக்காக ஜெர்சி அறிமுக விழா நடைபெற்றது. 

இதில் வீரேந்திர சேவாக் கலந்து கொண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற வேண்டும் அதற்கு 10 ஓவர் கொண்ட T10 தொடர் சரியானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் "நாம் அனைவரும் கிரிக்கெட் தொடர் ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற வேண்டும் என்று பேசி கொண்டிருக்கிறோம். கிரிக்கெட் போட்டி ஒலிம்பிக்கில் இடம்பெற T10 சரியானதாக இருக்கும். ஏனென்றால் 10 ஓவர் கொண்ட போட்டியானது 90 நிமிடங்களில் முடிந்து விடும். கால்பந்து போட்டியை போல 90 நிமிடங்களில் போட்டி முடிந்து முடிவு தெரிந்துவிடும். எனவே இந்த ஐசிசி ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற பேசினால் T20 போட்டி சரியானதாக இருக்கும் என்று  நான் நினைக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். 

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற வேண்டும் - சேவாக்