ads
மும்பையில் நடந்த கிரிக்கெட் தொடரில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்
விக்னேஷ் (Author) Published Date : Nov 24, 2017 21:25 ISTSports News
கிரிக்கெட் உலகில் மாபெரும் சாதனை படைத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர் சச்சின் டெண்டுல்கர். இவர் தனது 13 வது வயதிலேயே கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமானவர். மேலும் அனைத்து போட்டிகளிலும் 100 சதங்களை அடித்து முதல் சாதனை படைத்தவர். முதன் முதலில் இரட்டை சதம் அடித்த வீரரும் இவரே. இவர் இந்தியாவில் முதலாவது உயரிய குடிமுறை விருதான பாரத ரத்னா விருதையும், விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார். இவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது தீவிரமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். தனது தந்தைக்கு உள்ள புகழினால் இவருக்கு பொறுப்புகள் நிறையவே உள்ளது.
மும்பையில் கூட்ச் பெஹர் டிராபி கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோர் ரஞ்சி போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மத்திய பிரதேச அணிக்கும் மும்பை அணிக்கும் கடந்த 5 நாட்களாக போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் தனது பந்து வீச்சு திறமையால் தொடர்ந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த போட்டியின் இறுதியில் மத்திய பிரதேச அணி 361 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதன் பின்பு ஆடிய மும்பை அணி 506 ரன்களை எடுத்துள்ளது. இந்த போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்திய அர்ஜுன் டெண்டுல்கருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.