ads
சென்னை அணியில் மீண்டும் களமிறங்கும் தோனி
யசோதா (Author) Published Date : Dec 06, 2017 22:45 ISTSports News
கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் ஆகிய இரு அணிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இரண்டு ஆண்டுகள் ஐபிஎல்லில் விளையாட சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருந்தது. தடை செய்யப்பட்ட இரு அணியில் உள்ள வீரர்கள் வேறு அணிக்காக விளையாடுவார்கள் என்று உத்தரவு போடப்பட்டது. இதனை அடுத்து குஜராத் மற்றும் புனே என்று இரு அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. தோனி புனே ஆட்டத்தின் முதல் தொடரில் மட்டும் அணிக்கு தலைமை தாங்கினார். தடை உத்தரவு இந்த ஆண்டுடன் முடிவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் களமிறங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் சென்னை அணிக்காக தோனி விளையாடுவாரா என்ற கேள்விகள் எழுந்தது.
இந்நிலையில் ஐபிஎல் ஆட்சி மன்ற குழு இன்று நடைபெற்றது. அதில் ஒவ்வொரு அணியில் இருந்தும் 5 மூத்த வீரர்களை வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை ஏலத்திற்கு அனுப்பலாம் என்று முடிவெடுத்துள்ளது. குஜராத் மற்றும் புனே அணிகளில் மூன்று பேரை (1 உள்நாட்டு வீரர் மற்றும் இரண்டு வெளிநாட்டு வீரர்) தக்க வைத்து கொள்ளலாம். ஆகையால் தோனி சென்னை அணிக்கு திரும்புவதில் தடை இல்லை என்பது தெளிவாகிறது. மேலும் 2018-இல் நடக்கும் ஐபிஎல் தொடரின் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது. ஒவ்வொரு அணியின் ஏலத்திற்காக செலவிடும் தொகை 66 கோடியில் இருந்து 80 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.