ads
பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தமிழக வீரர் அஸ்வின்
வேலுசாமி (Author) Published Date : Feb 26, 2018 18:28 ISTSports News
இந்தியாவின் 11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி முதல் மே மாதம் 27-ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கான ஏழாம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக 25 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர்.
இதில் கிங்ஸ் லவன் பஞ்சாப் அணியில் 21 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இந்த அணியில் பந்து வீச்சாளர் அஸ்வினை 7.6 கோடி கொடுத்து பஞ்சாப் அணி வாங்கியது. அஸ்வின் சென்னை அணியில் இருந்து முதன் முறையாக பஞ்சாப் அணிக்காக விளையாட உள்ளார். இந்த அணியில் யுவராஜ் சிங், ஆரோன் பிஞ்ச், டேவிட் மில்லர், லோகேஷ் ராகுல், கருண் நாயர், மோகித் சர்மா, மனோஜ் திவாரி ஆகிய மூத்த வீரர்கள் இருக்கும் நிலையில் இவர்களில் யார் கேப்டனாக நியமிக்க படுவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது இந்த அணியின் கேப்டனாக அஸ்வின் நியமிக்க பட்டுள்ளதாக இயக்குனர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரான சேவாக் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் 90 சதவீதம் பேர் யுவராஜ் சிங் கேப்டனாக நியமிக்க படுவார் என்று எதிர்பார்த்திருந்தனர். தற்போது அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதன் மூலம் ஒரு பந்து வீச்சாளராக கேப்டனாக ஐபிஎல்லில் களமிறங்கவுள்ளார் அஸ்வின். இதுவரை அணியின் வீரராக தோனி, விராட் கோலியை களத்தில் சந்தித்த இவர் ஒரு கேப்டனாக முதன் முறையாக ஆட உள்ளார்.