ads
ஐபிஎல்லின் தொடக்க விழா ஏப்ரல் 7ஆம் தேதிக்கு மாற்றம்
வேலுசாமி (Author) Published Date : Mar 05, 2018 02:36 ISTSports News
கடந்த ஆண்டு 2008 இல் ஐபிஎல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வரை 10 ஐபிஎல் போட்டி நடந்துள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் தலா இரண்டு முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஜ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் தலா 1 முறையும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இதனை தொடர்ந்து 11-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டி 9 மைதானங்களில் 51 நாட்கள் நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 ஆண்டு தடைக்கு பிறகு இதில் பங்கேற்கின்றன.
இதுதவிர மும்பை இந்தியன்ஸ், கொல்கததா நைட்ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளும் கலந்து கொள்கின்றன. மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளது. முன்னதாக ஐபிஎல்லின் தொடக்க விழா வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி மும்பை கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது ஏப்ரல் 7-ந்தேதிக்கு தொடக்க விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் போட்டி நடைபெறும் தினத்தில் தொடக்க விழா நடைபெற உள்ளது. மேலும் தொடக்க விழாவை வான்கடே மைதானத்தில் நடக்க மாற்றப்பட்டுள்ளது. இதனை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக குழு இந்த முடிவை அறிவித்துள்ளது.
அதேபோல் தொடக்க விழாவுக்கான செலவுத்தொகையை குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஐபிஎல் தொடக்க விழாவுக்கு 50 கோடி செலவிட ஆட்சி மன்ற குழு ஒப்புதல் அளித்திருந்தது. இந்த தொகையை தற்போது 20 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவின் போது ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் தற்போதைய சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.