ads

ஆண்டராய்டு மொபைல் மூலம் பயனாளர்களின் பல தகவல்களை திருடும் கூகுள்

கூகுள் நிறுவனம் மாதத்திற்கு ஜிபி அளவிற்கு வாடிக்கையாளரிடம் தகவலை திருடுவதாக ஆரக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் மாதத்திற்கு ஜிபி அளவிற்கு வாடிக்கையாளரிடம் தகவலை திருடுவதாக ஆரக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரபல இணைய வழி தொழில்நுட்ப கம்பெனியான கூகுள் தற்போது பிரச்சனையில் மாட்டி கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா நுகர்வோர் ஆணையம் (Australian Competition and Consumer Commission) எனப்படும் ஆணையமானது வாடிக்கையாளரின் உரிமையை காப்பது, வணிக உரிமைகள் மற்றும் அதன் கடமைகள், விலை கண்காணிப்பு, சட்டவிரோதமான செயல்களை தடுப்பது போன்ற செயல்களில் 22 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. முன்னதாக பிரபல மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் (Oracle), கூகுள் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் GB (GigaBytes) அளவிற்கு ஆண்டிராய்டு மொபைல் மூலம் வாடிக்கையாளர் தகவலை திருடுவதாக தெரிவித்தது.

இதன் அடிப்படையில் தற்போது கூகுள் நிறுவனம் மீது ஆஸ்திரேலியா நுகர்வோர் ஆணையம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது. ஆரக்கிள் நிறுவனம் அளித்த தகவலினால் கூகுள் நிறுவனத்தை மட்டுமல்லாமல் பேஸ்புக் நிறுவனத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. ஆரக்கிள் அளித்த தகவலில், ஆண்டிராய்டு மொபைல் மூலம் பயனாளர்கள் தற்போது எதனை பார்க்கிறார்கள், எதனை தேடுகிறார்கள் போன்ற அனைத்து தகவல்களும் சட்டவிரோதமாக கூகுள் நிறுவனத்திற்கு கிடைக்கிறது.

இதற்கு கூகுள் நிறுவனம் பதிலளிக்கையில், "கூகுள் தனது வாடிக்கையாளரின் முழு தகவல்களையும் கண்காணிக்க, அவருடைய அனுமதியை கேட்கிறது. அவர் அனுமதித்த பின்னரே அவரை சுற்றியுள்ள தகவல்களை சேகரிக்கிறது. பயனாளர்கள் ஒரு ஹோட்டல் அல்லது குறிப்பிட்ட இடங்களை தேடும்போது, அவருடைய செயல்பாடுகளின் (Activity) அடிப்படையில் அவருக்கு தேவையான தகவல்களை அளிக்கிறோம். இது ஆண்டிராய்டு மொபைகளுக்கு மட்டுமில்லை, இது ஒரு கூகுள் சேவையில் ஒன்று." என்ற பதிலளித்துள்ளது.

மேலும் இது குறித்து ஆஸ்திரேலியா தனியுரிமை அறக்கட்டளையின் (Australian Privacy Foundation) சேர்மேன் (David Vaile) என்பவர் கூறுகையில் "கூகுள் மற்றும் பேஸ்புக் போன்றவை வணிகத்திற்காக கண்காணிக்கும் நிறுவனங்கள் என்பதை பயனாளர்கள் அறிய வேண்டும். கண்காணிப்பை வைத்து அதற்கேற்றவாறு விளம்பரங்களை விற்பது அவர்களுடைய முக்கிய நோக்கமாகும். இந்நிறுவனங்கள் அவர்களுடைய போக்கில் சரியாக சென்று கொண்டிருக்கின்றனர். கூகுள் நிறுவனம் தனக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தை அதிகரித்து வருகிறது. கூகுள் நிறுவனம் மட்டுமல்லாமல் பல செயலிகள் நமக்கு தெரியாமல் ஆண்டிராய்டு மொபைல் மூலம் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து வருகின்றன. இந்த சூழ்நிலையை மக்கள் தெரிந்தே அனுசரித்து வாழ்ந்து வருகின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் மீதான இந்த விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகிறது. 

ஆண்டராய்டு மொபைல் மூலம் பயனாளர்களின் பல தகவல்களை திருடும் கூகுள்