ads
கூகுளின் புதிய டேட்டாலி செயலி
வேலுசாமி (Author) Published Date : Dec 01, 2017 16:42 ISTTechnology News
கூகுள் நிறுவனம் வாடிக்கையாளரின் டேட்டா பயன்பாட்டை சேமிக்க 'டேட்டாலி (Datally)' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி வாடிக்கையாளர் பயன்படுத்தும் டேட்டாவை தெரிந்து கொண்டு வாடிக்கையாளர் எவ்வளவு டேட்டா பயன்படுத்தியுள்ளார், எந்த செயலிகள் டேட்டாவை உபயோகிக்கிறது, பின்னணியில் எவ்வளவு டேட்டா பயன்படுத்தப்படுகிறது (Background Data Process) போன்றவற்றை தெரிந்து மொபைலின் டேட்டா (Mobile Data Usage) பயன்பாட்டை கட்டுப்படுத்துகிறது. டேட்டாலி செயலியானது வாடிக்கையாளரின் மொபைல் டேட்டாவை ஒருமணி நேரம், வாரம், மாதம் போன்றவற்றின் அடிப்படையில் கண்காணிக்கும். இதனை அடுத்து மொபைல் டேட்டாவை கட்டுப்படுத்த உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த செயலி பரிந்துரைக்கும்.
ஸ்மார்ட்போனில் எந்த செயலி அதிக அளவு டேட்டாவை உபயோகிக்கிறதோ அந்த குறிப்பிட்ட செயலியில் மட்டும் டேட்டா பயன்பாட்டை நிறுத்த முடியும். இந்த டேட்டா உபயோகிக்கும் அளவை கண்காணிக்க வி.பி.ஏன் இணைப்பு (VPN Connection) பயன்படுத்தப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர் இருக்கும் இடங்களில் வை-பை (Wi-Fi) இருந்தால் அந்த இடத்திற்கு செல்வதற்கு கூகுள் மேப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் உங்களுக்கு மிக அருகாமையில் இருந்து குறிப்பிட்ட தொலைவு வரை உள்ள வை-பை (Wi-Fi) பட்டியலை காண்பிக்கிறது. கூகுளின் டேட்டாலி அறிமுக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.