ads

குறைந்த ரேம் கொண்ட ஸ்மார்ட் போனுக்கு கூகுளின் 'மேப்ஸ் கோ'

google launced new google maps go app

google launced new google maps go app

கூகுள் நிறுவனம் தற்போது கூகுள் மேப்ஸ் கோ (Google Maps Go) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. முன்னதாக வெளியிட்ட கூகுள் பைல்ஸ் கோ (Google Files Go) என்ற செயலி வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த கூகுள் பைல்ஸ் கோ (Google Files Go) செயலியில் நாம் தேடும் செய்திகள் வீடீயோஸ்,ட்விட்டர், பேஸ்புக், இமேஜஸ், மேப்ஸ் போன்றவை தனித்தனியாக வாடிக்கையாளர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது கூகுள் மேப்ஸ் கோ (Google Maps Go) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியானது குறைந்த செயல்திறன் கொண்ட ஸ்மார்ட் போனில் இயங்கக்கூடிய செயலியாக வடிவமைக்க பட்டுள்ளது. 

கூகுள் வெளியிட்டுள்ள தகவலின் படி இந்த செயலியானது 512 எம்பி மற்றும் 1 ஜிபி ரேமுக்கு குறைவாக இருக்கும் ஸ்மார்ட் போனில் வேலை செய்வதற்காக உருவாக்கப்பட்டது. அதன்படி 2ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட் போனில் உள்ள பிளேஸ்டோரில் தேடினாலும் கிடைக்காது. இந்த செயலியானது பொதுவாக பிளேஸ்டோரில் கிடைக்கும் கூகுள் மேப்ஸின் (Google Maps) லைட் வெய்ட் பதிப்பு மற்றபடி இந்த செயலியின் அம்சங்களில் எந்த மாறுபாடு செய்யவில்லை. இந்த புதிய செயலியானது கூகுளின் ஃபைல்ஸ் கோ, கூகுள் கோ மற்றும் யூடியூப் கோ போன்ற செயலிகளுடன் இணைந்து கொள்ளும். மேலும் கூகுள் நிறுவனம் பல்வேறு குறைந்த செயல்திறன் கொண்ட செயலியை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய பாதிப்பு செயலிகள் ஆண்டிராய்டு ஓரியோ திட்டத்தில் அங்கமாக வெளியிடப்பட்டுள்ளது.

குறைந்த ரேம் கொண்ட ஸ்மார்ட் போனுக்கு கூகுளின் 'மேப்ஸ் கோ'