பூமியை போன்று 20 சதவீதம் அளவில் பெரிய கிரகம் கண்டுபிடிப்பு - வீடியோ

       பதிவு : Mar 29, 2018 10:49 IST    
கெப்ளர் தொலைநோக்கி உதவியுடன் பூமியை விட 20 சதவீதம் அளவில் பெரிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கெப்ளர் தொலைநோக்கி உதவியுடன் பூமியை விட 20 சதவீதம் அளவில் பெரிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியில் அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் சில தொலைநோக்கியின் மூலமாகவும், அறிவியல் நுணுக்கங்களையும் வைத்து தற்போது வரை ஏராளமான கிரகங்கள், நட்சத்திரங்கள் போன்றவைகளை கண்டுபிடித்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது பூமியை போன்ற கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகம் பூமியில் இருந்து 339 மில்லியன் ஒளியாண்டு தொலைவில் உள்ளது. இந்த கிரகத்தை 'University of Warwick' மற்றும் 'Aix-Marseille University' போன்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

"K2-229b" என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த கிரகம் பூமியை விட 20 சதவீதம் பெரியது. அதன் நிறை 2.5 மடங்கு அதிகம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த கிரகம் நம் சூரிய குடும்பத்தில் இருக்கும் 'புதன்' கோளை போன்று 2.5 மடங்கு உலோக அடர்த்தி கொண்டுள்ளது. இந்த கிரகம் K2-229 என்ற தனது நட்சத்திரத்திற்கு மிக அருகில் உள்ளது.

 

இந்த நட்சத்திரத்தை 14 மணிநேரத்திற்கு ஒரு முறை சுற்றி வருகிறது. இந்த கிரகத்தை கெப்ளர் வான் தொலைநோக்கி (Kepler space telescope) மூலமாக கண்டுபிடித்ததனால் இதற்கு "K2-229b" என்று பெயர் வைத்துள்ளனர். இந்த கிரகத்தின் தன்மைகளை வார்விக் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். 


பூமியை போன்று 20 சதவீதம் அளவில் பெரிய கிரகம் கண்டுபிடிப்பு - வீடியோ


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்