ads
கையெறி குண்டை வைத்து செல்பி எடுக்க முயன்ற வாலிபர் உடல் சிதறி பலி
மோகன்ராஜ் (Author) Published Date : Dec 06, 2017 21:31 ISTWorld News
செல்பி மோகத்தால் உலகெங்கும் மக்கள் அபாயகரமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். வளர்ந்து வரும் நாகரிக உலகில் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போனை இல்லாமல் வாழ மறுக்கின்றனர். இதனால் செல்பி மோகம் அதிகரித்து வருகிறது. செல்பி எடுத்து புகைப்படத்தை நண்பர்களுக்கு உறவினர்களுக்கு பகிர்ந்து வருவது வழக்கம். இந்த வழக்கம் தற்போது சற்று மாறுபட்டு ரயில் வரும் முன் செல்பி எடுப்பது, உயர்ந்த கட்டிடங்கள் மேல் இருந்து செல்பி எடுப்பது, செல்பி எடுப்பதற்காக சாகசம் செய்வது போன்ற அபாயகரமான செயலில் மக்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அபாயகரமான செயலால் ஏராளமான உயிரிழப்புகள் உலகெங்கும் நடைபெற்று வருகிறது.
இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் என்ற இளைஞர் கையெறி குண்டை (Hand grenade) வைத்து செல்பி எடுத்து நண்பருக்கு அனுப்ப முயன்றுள்ளார். கையெறி குண்டில் (Hand grenade) உள்ள பின்னை எடுத்து செல்பி எடுக்க முயன்றுள்ளார். ஆனால் பின்னை வெளியே எடுத்த சற்று நேரத்தில் குண்டு வெடித்து உடல் சிதறி உயிரிழந்தார். குண்டில் உள்ள பின்னை வெளியே எடுத்து குண்டை வீசினால் தான் வெடிக்கும் கையில் வைத்தால் வெடிக்காது என்று முட்டாள்த்தனமாக முடிவெடுத்ததன் விளைவாகவே இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற முட்டாள்த்தனமான, அபாயகரமான செயலில் மக்கள் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.