ads

கிம் ஜோங்கை நேரில் சந்திக்கபோகிறார் அதிபர் டிரம்ப்

கிம் ஜோங்கை நேரில் சந்திக்கபோகிறார் அதிபர் டிரம்ப். Donald J Trump representation image. Image Credit:Wikimedia Commons

கிம் ஜோங்கை நேரில் சந்திக்கபோகிறார் அதிபர் டிரம்ப். Donald J Trump representation image. Image Credit:Wikimedia Commons

கிம் ஜோங் உன் உடன் நேரில் சந்திக்க தயார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய முயற்சி.

முதன் முறையாக அமெரிக்கா வரலாற்றிலேயே எந்த அதிபரும் செய்யாத சாகசத்தை செய்ய போகிறார் அமெரிக்காவின் 45-வது அதிபர் டொனால்ட் டிரம்ப். வடகொரியாவின் சர்வாதிகாரியான கிம் ஜோங் உன்-ம் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்-ம் நேரில் சந்திக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கி திக்குமுக்காடாகச் செய்திருக்கிறது. 

நேற்று வியாழக்கிழமை அன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தென்கொரிய தேசிய பாதுகாப்பு இயக்குனர்  சுங்-ஐய்-யோங் வருகின்ற மே மாதத்தில் வடகொரியாவின் கிம்மும் அமெரிக்காவின் டிரம்ப்-ம் நேரில் சந்தித்து வடகொரியாவின் அணு ஆயுத கட்டுப்பாட்டை பற்றி பேசவுள்ளதாக தெரிவித்தார்.

முதலில் கிம்-ஜோங்-உன்-தான் அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்க அழைத்ததாகவும் டிரம்ப் தன் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடிவிட்டு கிம்மின் அழைப்பை ஏற்றுள்ளார் என்று கூறினார்.

வடகொரியாவின் சர்வாதிகாரியான கிம்மையும் அவரது அணு ஆயுதங்களையும் ஒலித்துக்கட்டவே அமெரிக்க அதிபர் ஆகியிருக்கிறேன் கண்டிப்பாக அதை செய்துகாட்டுவேன் என்ற சபதத்தோடு வெள்ளை மாளிகையில் குடியேறினார் அதிபர் டிரம்ப். ஆனால் அதன் பிறகு டிரம்ப்- கிம் இருவருக்கும் இடையே நடந்த மோதல்கள் அனைத்தும் வரலாற்றில் பதியப்படவேண்டிய செயல்களாகவே மாறிப்போனது.

டீடைலாக எதற்கு, இரண்டு சாம்பிள்கள் அதற்கு போதுமானது. முதலாவதாக கடந்த வருடம் வடகொரியா நடத்திய ஒரு ஏவுகணை சோதனைக்குப் பிறகு டிரம்ப் அவரது டிவிட்டர் பக்கத்தில் கிம்-ஜோங்-உன்-ஐ "லிட்டில் ராக்கெட் மேன்" என்று கலாய்த்து கடுப்பேற்றினார்.

அதற்க்கு பதிலடியாக 2018 புது வருடப் பிறப்பன்று கிம்-ஜோங்-உன் ஒரு மேடைப்பேச்சில் இவ்வாறு கூறினார்,  அதாவது "அவரது அலுவலக மேசையில் ஒரு அணு ஆயுத பட்டன் இருப்பதாகவும் அதை அவர் அழுத்தினால் அமெரிக்கா இருக்காது" எனவும் சொல்லிறியிருந்தார். அந்த பேச்சை கேட்டு எரிச்சலடைந்த அதிபர் டிரம்ப் "என்னிடமும் அணு ஆயுத பட்டன் இருக்கிறது அனால் அது கிம் வைத்திருப்பதை விட பெரியது அது வேலையும் செய்கிறது" என்று "என் மிட்டாய் உன்னோடத விட பெரியது" என்ற ஸ்டைலில் டுவீட் செய்தார். 

அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் அதிபர் டிரம்ப்-ஆல்  வடகொரியாவின் மீது கடுமையான பொருளாதார யுத்தம் தொடங்கப்பட்டது. வடகொரியாவுடன் கடல் வழி வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நிறுவனமும் அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ளவேண்டாம்  என்று வர்த்தக வரிகளை உயர்த்தவும் செய்தார்.

கடும் கேலிக்கும் கின்னடலுக்கும் உள்ளான கிம்மும் ட்ரம்பும் இப்போது நேரில் சந்தித்து அணு ஆயுத கொள்கைகள் பற்றி பேசப்போகிறார்கள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1950-க்கு பிறகு வடகொரிய தலைவர்களுடன் எந்த அமெரிக்கா அதிபரும் நேரில் சந்தித்து பேசியதில்லை, டிரம்ப் தான் முதன்முறையாக இத்தகைய செயலில் இறங்கியுள்ளார். 

கிம் ஜோங்கை நேரில் சந்திக்கபோகிறார் அதிபர் டிரம்ப்