ads

நூற்றுக்கு மேற்பட்ட நோயாளிகளை விஷஊசி போட்டு கொலை செய்த நர்ஸ்

நூற்றுக்கு மேற்பட்ட நோயாளிகளை விஷஊசி போட்டு கொலை செய்த நர்ஸ்

நூற்றுக்கு மேற்பட்ட நோயாளிகளை விஷஊசி போட்டு கொலை செய்த நர்ஸ்

நீல்ஸ் ஹோகேள், இவர் ஜெர்மனியை சேர்ந்தவர் இவருக்கு வயது 41. இவர் இதுவரை இரண்டு மருத்துவமனைகளில் செவிலியராக பணியாற்றியுள்ளார். 2005 ஆம் ஆண்டு நீல்ஸ் நோயாளி ஒருவருக்கு விசஊசி செலுத்தியதை பணிப்பெண் பார்த்து அவர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து கடந்த 2015-ஆம் ஆண்டு ப்ரிமென் நகரில் இருக்கும் டெல்மென்ஹோர்ஸ்ட் மருத்துவமனையின் ஐசியு பிரிவில் இருந்த 2 நோயாளிகளை நீல்ஸ் கொன்றது, 4 பேரை கொலை செய்ய முயன்ற வழக்கில் இவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. இவர் மீது மேலும் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில் இவர் இதுவரை 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கொலை எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இவர் விஷத்தன்மை வாய்ந்த ஊசியை நோயாளிகளுக்கு செலுத்திவிட்டு பிறகு நோயாளிகளை காப்பாற்ற முன்வருவார். இதன்மூலம் அவருக்கு திறமைமிக்க செவிலியர் என்ற பெருமை கிடைக்கும் என்றும் பொழுதுபோக்குக்காக விசஊசி போட்டதாகவும் நீல்ஸ் தெரிவித்துள்ளார். 

நூற்றுக்கு மேற்பட்ட நோயாளிகளை விஷஊசி போட்டு கொலை செய்த நர்ஸ்