ads
4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எகிப்து பிரமிடில் ஒரு புது கண்டுபிடிப்பு
ராசு (Author) Published Date : Nov 09, 2017 17:56 ISTWorld News
4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எகிப்து பிரமிடை பற்றி இயற்கை அறிவியல் இதழ் என்ற பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் "கெய்ரோ அருகில் கிஸா பகுதியில் மன்னர்கள் மென்குரே மற்றும் கப்ரே ஆகியோரின் கல்லரைக்கு அருகே இந்த பிரமிடு உள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் குபு பிரமிட் 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த பிரமிடின் முக்கிய பகுதியில் சுமார் 200 பேர் அமரக்கூடிய விமானம் அளவுக்கு வெற்றிடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வெற்றிடம் அரசர் குபுவின் கல்லறையாக இருக்கலாம். மேலும் இந்த வெற்றிடத்தை காஸ்மிக் கதிர்களை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்." என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பிரமிடுகள் பழங்காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சடலங்களை பாதுகாக்க பிரமிடு என்ற பெயரில் கட்டியுள்ளனர். இந்த பிரமிடுகள் உலகத்தில் மிக பிரபலமானவை. இந்த பிரமிடை மன்னர் குபு உருவாக்கியுள்ளார். இந்த பிரமிடின் உயரம் கிட்டத்தட்ட 139 மீட்டர் அளவாகும்.