ads

உலக தண்ணீர் தினத்தில் வாடும் விவசாயமும் நீர்நிலைகளும்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இன்று உலகம் முழுவதும் குடிநீரின் அவசியத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் மேம்படுத்தும் விதமாக தண்ணீர் தினம் கொண்டாடபட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக கொண்டாட 1993-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் ஆலோசித்து அறிவித்தது. அன்று முதல் இன்று வரை 15 வருடங்களாக உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் குடிநீர் திட்டங்களுக்காக பல்வேறு அமைப்புகள் நிதி திரட்டி வருகிறது.

மேலும் பல்வேறு அமைப்புகள் தண்ணீர் தினத்தில் குடிநீரின் முக்கியத்துவம் பற்றி சாமானிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் 97 சதவீதம் கடல் நீர் சூழ்ந்துள்ளது. மீதமுள்ள 3 சதவீதம் மட்டுமே உப்பு நீரும், வேதி பொருளும் அல்லாத நன்னீர் எனப்படுகிறது. இந்த மூன்று சதவீதத்தில் தொழிற்சாலைகள், விவசாயம், வீட்டு உபயோகம் போன்றவற்றிற்காக 90 சதவீதம் நீர் உபயோகப்படுத்தப்படுகிறது.

மீதமுள்ள 10 சதவீதத்திற்கும் குறைவான நீர் மட்டுமே குடிநீராக பயன்படுத்தப்படுகிறது. இந்த குடிநீர் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மக்கள் அனைவரும் ஆறு, ஏரி மற்றும் குளங்களில் இருக்கும் நீரையே நம்பி இருக்கின்றனர். உலகில் இருக்கும் நீர்நிலைகளில் 97 சதவீதம் உப்பு நீர் சூழ்ந்துள்ளதால் அவற்றால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மீதமுள்ள 3 சதவீதத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஆனால் தற்போது ஆறு மற்றும் ஏரிகளில் இருக்கும் நீர்நிலைகள் மோசமான சூழ்நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது உலகம் முழுவதும் தொழிற்சாலைகள் நிறைந்து காணப்படுகிறது. ஒரு தொழிற்சாலைகளை நடத்த நிலத்தடியில் துளையிட்டு பல்லாயிரம் டன் கன அளவில் நீரை உறிஞ்சுகின்றனர். இதனால் நிலத்தடி நீரும் குறைந்து, தொழிற்சாலைகளால் வெளியிடப்படும் கழிவுகளால் நீர்வளமும், சுற்றுப்புற சுகாதாரமும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. தொழிற்சாலைகளை குறைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இரவு பகல் முழுவதும் தண்ணீர் உறிஞ்சிக்கொண்டே இருப்பதால் உலக தண்ணீர் தினமான இன்று கூட குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் ஏராளமான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது மட்டுமல்லாமல் ஆறு, ஏரி, குளங்களுக்கு மூலமாக இருப்பது மழை நீர். இந்த மழை நீரும் படிப்படியாக குறைந்து குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எப்போதாவது பெய்யும் மழைநீரை சேமிக்கவும் மக்கள் மறந்துவிட்டனர்.

இதனால் குடிநீருக்காக வரும் மழைநீர் சாக்கடை போன்ற கழிவுகளில் கலந்து வீணாகிறது. உலகில் அழிவிற்கான காரணிகள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதில் குடிநீர் மற்றும் விவசாயத்தின் அழிவில் சீமை கருவேல மரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மரங்கள் நிலத்துக்கடியில் 53 மீட்டர் ஆழம் வரை வளர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சி, சுற்றியுள்ள பகுதிகளில் புல், பூண்டு போன்றவைகளும் முளைக்காத அளவிற்கு நச்சு பொருளை வெளியிடுகிறது.

இந்த சீமை கருவேல மரங்களால் நீரும், விவசாயமும் அழிவின் உச்சத்தில் இருக்கிறது. வருங்காலங்களில் வரும் தண்ணீர் பற்றாக்குறையை தடுக்க தொழிற்சாலைகளும், சீமை கருவேல மரங்களும் முற்றிலும் அழிக்க பட வேண்டும். மேலும் நாட்டில் நீர் வளம் பெருக எப்போதாவது வரும் மழைநீரை ஒவ்வொரு மக்களும் சேமிக்க வேண்டும்.

உலக தண்ணீர் தினத்தில் வாடும் விவசாயமும் நீர்நிலைகளும்