ads
கல்பனா சாவ்லா தான் அமெரிக்காவின் ஹீரோ அதிபர் ட்ரம்ப்
வேலுசாமி (Author) Published Date : May 02, 2018 15:50 ISTWorld News
நேற்று மே 1ஆம் தேதி சர்வதேச உழைப்பாளர் தினமாக உலகின் பல்வேறு நாடுகளில் மே மாதத்தின் தொடக்கத்தை கோலாகலமாக வரவேற்றனர். ஆனால் அமெரிக்காவில் தொழிலாளர் தினம் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் கொண்டாடப்படுகிறது. மேலும் அமெரிக்க, பசுபிக் தீவு பகுதிகளின் பாரம்பரிய மாதமாக மே மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது குறித்த நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்டு இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவை புகழ்ந்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் "விண்வெளி ஆராய்ச்சிக்கென தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கல்பனா சாவ்லா, அவருடைய ஆர்வமும், திறமையும் உலக பெண்மணிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறது. அவர் தான் 'அமெரிக்காவின் உண்மையான ஹீரோ'. இவருடைய இழப்பிற்கு பிறகு இவரின் நினைவை போற்றும் விதமாக அமெரிக்கா பல விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது" என்று அவர் புகழ்ந்து பேசியுள்ளார். அதிபர் ட்ரம்ப் கூறியது உண்மை தான். இந்திய மண்ணில் பிறந்து இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை அடைந்தவர். உண்மையில் அவர் தான் ரியல் ஹீரோ.
விண்வெளி துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பும், இவருடைய திறமையும் காலத்தால் அழியாத புகழ் பெற்றது. இவர் கடந்த 2003-ஆம் ஆண்டில் தன்னுடைய 41 வயதில் உயிரிழந்தார். கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7பேர் கொண்ட கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107) 2003, பிப்ரவரி 1-ஆம் தேதியில், ஆராய்ச்சிகளை முடித்து தரையிறங்க 15 நிமிடங்களே இருந்த நிலையில் டெக்ஸாஸ் மாகாணத்தின் வான்பரப்பில் வெடித்து சிதறியது. இதில் கல்பனா சாவ்லாவுடன் பயணித்த 7 பெரும் உயிரிழந்தனர்.