ராகவேந்திரா கோவிலுக்கு ரஜினிகாந்த் 10 கோடி நன்கொடை

rajinikanth donates 10 crore

 நடிகர் ரஜினிகாந்த்  கர்நாடகா - ஆந்திர எல்லையில் உள்ள மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரா கோவிலுக்கு நேற்று சென்றுள்ளார். இந்த செய்தியை அறிந்து ரசிகர்கள் கோவிலுக்குள் குவிந்தனர். இதனை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சால்வை அணிந்து வரவேற்கப்பட்டது. பின்னர் பக்தியுடன் ராகவேந்திரா சாமியின் சிறப்பு பூஜையை வழிபட்டு சிறிது நேரம் தியானம் செய்தபடி இருந்தார். பின்னர் மடாதிபதி சுபதேந்திர தீர்த்தசாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். மடாதிபதியுடன் சிறிது நேரம் பேசியபோது ராகவேந்திரா கோவில் பழமையாகிவிட்டதையும் பக்தர்களுக்கு தங்கும் விடுதி வேண்டும் என்பதையும் கேட்டறிந்தார். இதனை அடுத்து ராகவேந்திரா கோவிலுக்கு 10 கோடி நன்கொடை வழங்கினார். இந்த நன்கொடையின் மூலம் ராகவேந்திரா கோவில் புதுப்பிக்கப்பட உள்ளது. இதில் 25 ஏ.சியுடன் தங்கும் விடுதிகள், பக்தர்கள் தங்குவதற்காக 100 புதிய அறைகள் கட்டப்பட உள்ளது. 


ராகவேந்திரா கோவிலுக்கு ரஜினிகாந்த் 10 கோடி நன்கொடை