பொங்கலுக்கு வெளிவரவுள்ள அருண் விஜயின் தடம் டீசர்

arun vijay thadam movie official teaser from pongal

நடிகர் அருண் விஜய், இந்திய திரைப்பட நடிகர், பின்னணி பாடகர் மற்றும் சண்டை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் போன்ற திறமைகளை கொண்டவர். இவர் 1995-ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். திரையுலக குடும்பத்தில் பிறந்த இவர் சிறு வயதிலிருந்தே தனது தந்தையான நடிகர் விஜயகுமாரின் நடிப்பை பார்த்து திரையுலகில் ஆர்வம் கொண்டவர். இவருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் போதே நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தது.முதலில் பள்ளி படிப்பை முடிக்கும்படி அவரது தந்தை அதனை மறுத்துள்ளார். இவர் அறிமுகமான 'முறை மாப்பிள்ளை' படத்தில் இவர் நடிக்கும் போது இவருக்கு வயது 18. திரையுலகில் குறைந்த வயதில் கதாநாயகனாக அறிமுகமானவரும் இவரே. இந்த படத்தை தொடர்ந்து பிரியம், கங்கா கௌரி, துள்ளி திரிந்த வானம், அன்புடன், பாண்டவர் பூமி, ஜனனம், வேதா, மலை மலை, மாஞ்சா வேலு,தவம், தடையற தாக்க போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.இதனை அடுத்து இவர் நடிகர் அஜித்துடன் இணைந்து 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லன் கதாபத்திரத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்களின் வரவேற்புகள் கிடைத்தது. சமீபத்தில் இவருடைய நடிப்பில் 'குற்றம் 23' படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'தடம்' படத்தில் நடித்து வருகிறார்.'தடையற தாக்க' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இவர்களது கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்தில் அருண் விஜய் முதன் முதலாக இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘குற்றம் 23’ படத்தை தயாரித்த ரெதான்தி பீப்பிள் நிறுவனம் சார்பாக இந்தர் குமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் டீசரை ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் இவர் 'பாகுபலி' கதாநாயகன் பிரபாஸ் தற்போது நடித்து வரும் 'சாகோ' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது ஆனால் அதனை அருண்விஜய் மறுத்துள்ளார். இந்த படத்தில் பிரபாஸ் மற்றும் அருண்விஜய் ஆகியோர் வானில் சாகசம் செய்யும் ஸ்கைடைவ் (skydive) காட்சிகள் இடம் பெற்றது. நடிகர் அருண்விஜய் ஸ்கைடைவிங்கில் திறமை மிக்கவர். இவர் ஐக்கிய மாநிலத்தின் பாராசூட் கழகத்திடமிருந்து தனக்கென்று ஸ்கைடைவ் உரிமையை வைத்துள்ளார்.


பொங்கலுக்கு வெளிவரவுள்ள அருண் விஜயின் தடம் டீசர்


  Tags : 
 • thadam movie release date
 • thadam movie new updates
 • arun vijay thadam movie official teaser
 • actor arun vijay movie history
 • arun vijay tamil debut movie murai mappillai
 • actor arun vijay biography
 • thadam movie official teaser on pongal
 • yennai arindhaal arun vijay
 • saaho movie arun vijay
 • arun vijay extracurricular activities
 • நடிகர் அருண் விஜய்
 • அருண் விஜயின் முதல் படம் முறை மாப்பிள்ளை
 • பொங்கலுக்கு வெளிவரவுள்ள அருண் விஜயின் தடம் டீசர்
 • அருண் விஜய் வாழக்கை வரலாறு
 • அருண் விஜயின் சாகோ
 • United States Parachute Association
 • arun vijay own skydiving license