அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி அறிவிப்பு - பிரதமர் மோடி வாழ்த்து

modi wishes rahul gandhi

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்று. 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக இந்திய தேசிய காங்கிரஸ் உருவெடுத்தது. 15வது இந்திய நாடாளுமன்றத்தில் 206 உறுப்பினர்களை பெற்றிருக்கும் இக்கட்சி, அதிக உறுப்பினர்களை கொண்டிருக்கும் தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதன்மை கட்சியாகவும் திகழ்கிறது.  உமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம், சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவராக 1885 ஆம் ஆண்டு பம்பாயில் நடந்த கூட்டத்தில் உமேஷ் சந்திர பேனர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் குடியரசு தலைவராக சரோஜினி நாயுடு 1925-இல் பொறுப்பேற்றார். மேலும் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் ஒரே மகளான இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமராக 1966-இல் பொறுப்பேற்றார். 1977-இல் நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்தி தோல்வி அடைந்த பின்னர் 1980-இல் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார் இவர் 1984-இல் சுட்டு கொள்ளபட்டார். இவருக்கு ராஜிவ் காந்தி, சஞ்சய் காந்தி ஆகிய இரு பிள்ளைகள். இந்திரா காந்தியின் மறைவிற்கு பின்னர் 1985 முதல் 1991 வரை ராஜிவ் காந்தி பிரதமராக பதவி வகித்தார். இவர் 1991-இல் ஸ்ரீபெரம்பூரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். ராஜிவ் காந்தியின் மறைவிற்கு பின்னர் அவரது மனைவி சோனியா காந்தி 1998-இல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகி பொறுப்பேற்றார். இந்நிலையில் தற்போது அக்கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 16-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி தனது வேட்புமனுவை கடந்த வாரம் தாக்கல் செய்தார். அவரை தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் வேறு யாரும் தாக்கல் செய்யாததால் ராகுல் காந்தி போட்டியின்றி கட்சியின் தலைவராக நேற்று அதிகாரபூர்வமாக  அறிவிக்கப்பட்டார். இதற்கான சான்றிதழ் வரும் 16-ஆம் தேதி வழங்கப்படும் என்று முன்னணி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வரும் 16-ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி முன்னிலையில் ராகுல் காந்தி பதவியேற்கிறார். பதவியேற்றபின் கட்சியில் சில மாற்றங்களை ராகுல் காந்தி செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கட்சியின் 89வது தலைவராக பொறுப்பேற்கவுள்ள ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை அவரது சமூக வலைத்தளத்தில்  தெரிவித்துள்ளார். அதில் "காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்தியின் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி அறிவிப்பு - பிரதமர் மோடி வாழ்த்து


  Tags : 
 • indian national congress
 • list of indian national congress president
 • indira gandhi
 • rajiv gandhi
 • javaharlal nehru
 • sonia gandhi
 • ragul gandhi
 • ragul gandhi elected as indian national congress leader
 • ragul gandhi inauguration
 • indian national congress history
 • first woman president
 • இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி
 • காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி அறிவிப்பு
 • ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து
 • ராஜிவ் காந்தி
 • இந்திரா காந்தி
 • 87வது தலைவராக பொறுப்பேற்கவுள்ள ராகுல்காந்தி
 • modi wishes rahulgandhi
 • prime minister modi
 • modi tweet about rahulgandhi