ads
தி.மு.க தலைவர் கருணாநிதியிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி
வேலுசாமி (Author) Published Date : Nov 06, 2017 14:33 ISTஇந்தியா
பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க இன்று சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழிசை வரவேற்றார். பிரதமர் மோடியின் இந்த வருகை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தமிழிசை தெரிவித்தார். இதனை அடுத்து அரசியலில் மூத்த தலைவரான கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மோடி சந்தித்து நலம் விசாரித்தார். இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கும் என்று அரசியல் பிரமுகர்கள் விமர்சித்தனர்.
பிரதமர் மோடியின் இந்த சந்திப்பில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை மரியாதை தெரிவிக்கவே அவர் சந்தித்தார். மேலும் அவர் தலைவர் கருணாநிதிக்கு கைகொடுத்து நலம் விசாரித்து ஓய்வெடுக்க டெல்லி வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மரியாதை செலுத்த வந்த பிரதமர் மோடிக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கனிமொழி தெரிவித்தார்.
இதனை அடுத்து பிரதமர் மோடி தினத்தந்தியின் பவளவிழாவில் கலந்து கொண்டார். அதில் "அனைவருக்கும் வணக்கம், தினத்தந்தியின் 75-ஆம் ஆண்டு பவள விழாவில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று தமிழில் உரையாடினார். மக்களின் உணர்வுகளை சமூகத்தின் கடை கோடி வரை கொண்டு சென்றது தினத்தந்தி என்றும் 75-ஆண்டுகால சாதனை நிகழ்த்திய ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் நன்றி என்று புகழாரம் சூட்டினார். மேலும் அவர் தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.