ads
கரும்பு வளர்ச்சிக்காக பயன்படும் 'கேன் அட்வைசர்'
ராசு (Author) Published Date : Nov 08, 2017 11:10 ISTஇந்தியா
Technology News
மத்திய அரசின் இணைச்செயலாளர் சுபாசிஸ் பாண்டா, கோயம்புத்தூர் வீரகேளம் பகுதியிலுள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் கரும்புகளை பற்றிய ஆலோசனைகளுக்கு தமிழ் வழியில் 'கேன் அட்வைசர்' என்ற செயலியை அறிமுகம் செய்து வைத்தார். இந்த செயலி கரும்பு வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும் விதமாக தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என்று மூன்று மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உங்களது மொபைலில் உள்ள பிலே ஸ்டோரில் கேன் அட்வைசர்(Cane Adviser) என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். இது தமிழில் 'கரும்பு ஆலோசகர்' எனவும், ஆங்கிலத்தில் 'கேன் அட்வைசர்' எனவும் ஹிந்தியில் 'காணாசலாகர்' எனவும் பெயரிடப்பட்டிருக்கும்.
இது குறித்து கரும்பு ஆராய்ச்சி நிலைய இயக்குனர் பக்சி ராம் கூறுகையில் கரும்பு ஆராய்ச்சி நிலையமானது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரும்பு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக 1912 முதல் செயல் பட்டு வருகிறது. இந்த அமைப்பு கரும்பு வளர்ச்சிக்கு விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்ப முறைகளையும் பல்வேறு கரும்பு வகைகளையும் கற்று கொடுக்கிறது. மேலும் இந்தியா முழுவதும் சுமார் 5 மில்லியன் கரும்பு விவசாயிகள் உள்ளனர் அனைவரிடமும் தொடர்பு கொள்ள முடியாததால் இந்த செயலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயலியில் விவசாயிகள் கரும்பு நடும் நாளை பதிவு செய்து ஒவ்வொரு நாளும் என்ன செய்ய வேண்டும் எந்த மருந்துகள் உபயோகப்படுத்தவேண்டும் என்ற ஆலோசனைகளை பெறலாம். ஏதேனும் கரும்புகளுக்கு நோய் தாக்கப்பட்டால் அதனை புகைப்படம் எடுத்து இந்த செயலியில் அனுப்பலாம். இதன் மூலம் எங்கள் அமைப்பு அதனை ஆராய்ந்து தகுந்த ஆலோசனைகளை கூறுவார்கள்.