ads
ப்ளிப்கார்ட் நிறுவனம் மீது மும்பை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு
வேலுசாமி (Author) Published Date : Feb 02, 2018 11:40 ISTஇந்தியா
Business News
ஆன்லைன் வர்த்தக தளங்களில் முன்னணி நிறுவனமாக ப்ளிப்கார்ட் நிறுவனம் விளங்குகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக தலமான ப்ளிப்கார்ட் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு 10 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. உலகின் ஆன்லைன் வர்த்தக சேவையில் முதல் இடத்தில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்த சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகியோர் மூலம் ப்ளிப்கார்ட் நிறுவனம் 2007-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ப்ளிப்கார்ட் நிறுவனம் தொடக்கத்தில் புத்தகங்களை மட்டுமே விற்று வந்துள்ளது. பின்னர் 2010-ஆம் ஆண்டு முதல் மொபைல், லேப்டாப், மின்னணு சாதனங்கள் மற்றும் டிவி போன்றவற்றை விற்க தொடங்கியது.
தற்போது வரை இந்நிறுவனத்தில் 250 மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஆன்லைன் வர்த்தகத்தில் வாடிக்கையாளர்களின் கோரிக்கைககள் மற்றும் தேவைகளை அறிந்து பல சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது மும்பையை சேர்ந்த தேமராஜ் மேக்புர் நாகராளி (26) என்பவர் ப்ளிப்கார்ட் தளத்தில் 'ஐபோன் 8' என்ற மொபைலை ஆர்டர் செய்துள்ளார். இவர் சாப்ட்வெர் இன்ஜினியரான இவர் இந்த மொபைலுக்காக 55 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார்.
பின்னர் சில நாட்களுக்கு பின்பு அவரது வீட்டிற்கு வந்த ப்ளிப்கார்ட் பார்சலில் ஐபோனுக்கு பதிலாக 10 ரூபாய் பவர் சோப் தான் இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் ப்ளிப்கார்ட் நிறுவனம் மீது விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலளித்த ப்ளிப்கார்ட் நிறுவனம் "இந்த தவறு எப்படி நடந்தது என்று தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படும். சம்பந்தப்பட்டவருக்கு உரிய பொருள் கண்டிப்பாக வரும்" என்று விளக்கம் அளித்துள்ளது.