ads
குடியரசு தின விழாவில் பிரமிக்க வைத்த சாகசங்கள் வீடியோ
வேலுசாமி (Author) Published Date : Jan 26, 2018 17:05 ISTPolitics News
இந்தியா
நாட்டின் தலைநகரான புது தில்லியில் உள்ள ராஜ்பாத்தில் நாட்டின் 69 வது குடியரசு தினவிழா சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த விழாவில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் அணிவகுப்பினை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். இந்த ஆண்டும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றிய பிறகு சிறப்பு படை வீரர்கள் மற்றும் முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. இதனை தொடர்ந்து விமானப்படை, கடற்படை, பிரமோஸ் ஏவுகணை, ராணுவ டாங்கிகள் போன்றவை அணிவகுத்து.
இதனை அடுத்து ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக அலங்காரம் செய்யப்பட்ட வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. அசாம், இமாச்சல பிரதேசம், கர்நாடாகா, மகாராஷ்டிரா போன்ற வாகனங்களின் அலங்காரம் பொதுமக்களை கவர்ந்தது. இதனை தொடர்ந்து நாட்டின் பல மாநிலத்தை சேர்ந்த கலைஞர்கள் தங்களது பாரம்பரிய நடனத்தை வெளிப்படுத்தினர். அதன் பிறகு பாதுகாப்பு படையை சேர்ந்த மகளிர் வீராங்கணைகள் மோட்டார் சைக்கிளில் பல சாகசங்களை வெளிப்படுத்தினர். இந்த சாகசங்கள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர் விமான படையினரின் விமானங்கள் விண்ணில் சாகசத்தை நிகழ்த்தியுள்ளது. இறுதியாக தேசிய கீதம் இசைக்க விழா இனிதே நிறைவேறியுள்ளது.